சபரி மலை கோவிலுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் – குஷியில் பக்தர்கள்!

0
சபரி மலை கோவிலுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் - குஷியில் பக்தர்கள்!
சபரி மலை கோவிலுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் - குஷியில் பக்தர்கள்!
சபரி மலை கோவிலுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் – குஷியில் பக்தர்கள்!

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிற கார்த்திகை,தை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவார்கள். இந்த நிலையில் பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு ரயில்:

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் தற்போது கார்த்திகை,தை, மார்கழி ஆகிய தமிழ் மாதங்கள் வர இருப்பதால் இம்மாதங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் தாம்பரம்- செங்கோட்டை இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்படும் என அறிவித்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் இந்த ரயிலானது இயக்கப்படாமல் உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் கொல்லம் இடையே சென்னை எழும்பூர், செங்கோட்டை, கரூர்,திருச்சி,தஞ்சாவூர், மயிலாடுதுறை,விழுப்புரம், மதுரை சேலம்,நாமக்கல் வழியாக கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் திடீரென நில அதிர்வு – அதிர்ச்சியில் பொது மக்கள்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் சென்னை, எழும்பூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் சென்னையிலிருந்து கொல்லத்திற்கும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வாரந்தோறும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!