ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்க பிப்.23 கடைசி நாள்..!

0
ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்க பிப்.23 கடைசி நாள்..!
ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்க பிப்.23 கடைசி நாள்..!
ரயில்வேயில் 69 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்க பிப்.23 கடைசி நாள்..!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RAILTEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று கடந்த மாதம் வெளியானது. இதில் காலியாக உள்ள Deputy Manager, Senior Manager & Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RAILTEL) நிறுவனத்தின் அறிவிப்பின் படி Deputy Manager, Senior Manager & Manager பணிகளுக்கென மொத்தமாக 69 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்ப பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / B.Sc. (Engg) / MBA / PG Diploma in Business Administration / CA / ICWA (CMA) / LLB என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

இப்பணிக்கு வயது வரம்பானது, பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த முழு விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். மேலும் இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் SC / ST / PwD’s விண்ணப்பதாரர் ரூ.600/-, மற்ற வகுப்பு விண்ணப்பதாரர் ரூ.1,200/- விண்ணப்பக் கட்டணமாக இப்பணிக்கு செலுத்த வேண்டும். இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

RAILTEL Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!