கல்லூரிகளில் அரங்கேறும் ராகிங் – தடுப்பு குழு அமைக்க உத்தரவு.. இயக்குனர் சுற்றறிக்கை!
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சக மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராகிங் தடுப்பு குழு:
தமிழகத்தில் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க உயர் கல்வித்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராகிங் செய்வது முற்றிலும் தவறு கல்லூரி வளாகங்களில் ராகிங் போன்ற குழு நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி அண்மையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக புகார் அளித்ததன் பேரில் தற்போது ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குனரகம் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ராகிங் நடைபெறுவதற்கு முன்பு கல்லூரியில் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – மேலும் 7 லட்சம் பேர் சேர்ப்பு.. அமைச்சர் தகவல்!
மேலும் ராகிங் தொடர்பாக உடனடியாக ஆசிரியரிடம் புகார் தெரிவிக்க கல்லூரி வளாகத்தில் முகவரி, செல்போன் எண், ஆசிரியர் பெயர் ஆகியவற்றை மாணவர்களுக்கு தெரியும் படி அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.