பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?

0
பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா - கோபியின் சுயரூபம் தெரிய வருமா?
பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா - கோபியின் சுயரூபம் தெரிய வருமா?
பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தான் சுவாரசியம் அதிகமாகும் வகையில் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரப்போகும் எபிசோடுகளில் அனல் தெறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியா கோபி மீது கொண்ட நம்பிக்கையினால் முதலில் செல்வியை பகைத்துக் கொண்டார். தற்போது தனக்கு மிகவும் பிடித்த எழில் கோபியை மதிக்காமல் செய்த செயலினால் எழில் மீதே கோவப்பட்டு பேசாமல் இருக்கிறார். கோபி மீது அந்த அளவிற்கு பாசம் பாக்கியாவிற்கு. ஆனால் கோபி எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் அதற்கு பாக்கியா தான் காரணம் என்று மொத்த பழியையும் பாக்கியா மீது சுமத்துகிறார். இந்நிலையில், ராதிகாவை பாக்கியாவிடம் இருந்து பிரிக்க வேறு வீட்டிற்க்கு மாற்றி செல்கிறார்.

விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில் ராதிகா பாக்கியாவிடம் ஒரு சமையல் ஆர்டர் விஷயமாக பார்க்க வருகிறார். 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யும் ஆர்டர் அது. ராம மூர்த்தி தாத்தா ஒரு புறம் கோபியின் நடவடிக்கை பற்றி பாக்கியாவிடம் ஏதும் சொல்ல வேண்டாம் என்று எழிலிடம் சத்தியம் வாங்குகிறார். இதனால் எழில் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். பாக்கியா மற்றும் ராதிகாவை பிரிக்க நினைக்கும் கோபி இந்த உணவு ஆர்டர் விஷயத்தில் ஏதாவது சொதப்பலை ஏற்படுத்த துடிக்கும் படி காட்சிகள் வர உள்ளது.

‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மகள் ஐலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – குவியும் வாழ்த்துக்கள்!

இதற்காக மொபைல் நம்பரை மாற்றுவது இது போன்ற வேலைகளை செய்ய உள்ளார். இதனால் ஆர்டரில் சொதப்பல் நடந்து பாக்கியா மற்றும் ராதிகா இடையே மோதல் வெடிக்கும், அதன் பலனால் பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மையும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராதிகா கோபியை பற்றி தெரிந்த பின்னர் கோபியை வெறுத்து ஒதுக்குவாரா அல்லது சுயநலமாக முடிவெடுப்பாரா என்ற காட்சிகள் இ நீ வரும் எபிசோடுகளில் வர உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!