கோபியை பார்க்க வந்த பாக்கியா, மனைவி என சொல்லி பில் கட்டும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

0
கோபியை பார்க்க வந்த பாக்கியா, மனைவி என சொல்லி பில் கட்டும் ராதிகா -
கோபியை பார்க்க வந்த பாக்கியா, மனைவி என சொல்லி பில் கட்டும் ராதிகா - "பாக்கியலட்சுமி" சீரியல் இன்றைய எபிசோட்!
கோபியை பார்க்க வந்த பாக்கியா, மனைவி என சொல்லி பில் கட்டும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியை பார்க்க பாக்கியாவும் மருத்துவமனைக்கு வருகிறார். நர்ஸ் கோபியின் மனைவி யார் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அப்போது பாக்கியா பணம் கட்ட வேண்டுமா என கேட்க ஏற்கனவே அவருடைய மனைவி கட்டிவிட்டதாக நர்ஸ் சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியை பார்க்க பாக்கியா மருத்துவமனைக்கு வருகிறார். அதற்கு முன்னதாகவே ராதிகா வந்து கோபியை பார்த்துவிட்டு செல்கிறார். பாக்கியா பதட்டத்துடன் கோபி ரூமை தேடி செல்கிறார். நர்ஸ் ராதிகாவை மனைவி என நினைத்து பில் கட்ட சொல்கிறார். ராதிகாவும் பில் கட்ட சென்றுவிட பாக்கியா வந்து வேறு நர்ஸிடம் நான் அவருடைய மனைவி கோபியை பார்க்க வேண்டும் என கேட்க நர்ஸ் பார்க்க சொல்கிறார். பாக்கியா கோபியின் நிலைமையை பார்த்து கதறி அழுகிறார்.

Exams Daily Mobile App Download

பின் ராதிகாவும் பில் கட்டிவிட்டு வர ஆனால் பாக்கியா இருப்பதை அவர் பார்க்கவில்லை. பின் பாக்கியா அழுவதை பார்த்து நர்ஸ் வெளியே காத்திருக்க சொல்கிறார். கோபியை ஸ்கேன் செய்ய அழைத்து செல்ல கோபியின் நிலைமையை பார்த்து ராதிகா வருத்தப்படுகிறார். அப்போது எழில் பாக்கியாவிற்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என கேட்கிறார். ஆனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் நான் அப்பறம் பேசுகிறேன் என போனை வைக்கிறார். பாக்கியாவும் ராதிகாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

கோபியை ஸ்கேன் செய்துவிட்டு கூட்டிக் கொண்டு வர, ராதிகாவின் அண்ணன் போன் செய்கிறார். எங்கே போனாய் அந்த ராஜேஷ் எதாவது தொல்லை செய்கிறானா என கேட்க அதெல்லாம் இல்லை கோபிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனையில் இருந்து போன் செய்ததாக சொல்கிறார். ராதிகாவின் அண்ணன் சரி பார்த்துக் கொள் என சொல்ல, ராதிகாவை கோபியின் ரிப்போர்ட் பற்றி சொல்ல டாக்டர் அழைப்பதாக நர்ஸ் சொல்கிறார். பின் ராதிகாவிடம் எதுவும் பிரச்சனை இல்லை என மருத்துவர் சொல்கிறார்.

ராதிகா & கோபியை மருத்துவமனையில் ஒன்றாக பார்த்து விடும் பாக்கியா – அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியா நர்ஸிடம் ரிப்போர்ட் பற்றி கேட்க நர்ஸ் நீங்க யாரு என கேட்கிறார். நான் அவருடைய மனைவி என சொல்ல நர்ஸ் அப்போ டாக்டரை பார்க்க போனது யாரு என கேட்கிறார். பின் பாக்கியா கோபியை பார்க்க வர அங்கே இருந்த நர்ஸிடம் பணம் எதுவும் கட்ட வேண்டுமா என கேட்கிறார். அப்போது நர்ஸ் அவருடைய மனைவி பணம் கட்டிடாங்க என சொல்ல பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். சரியாக சொல்லுங்க கோபிநாத் அவரை பற்றி கேட்கிறேன் என பாக்கியா சொல்ல, அவருடைய மனைவி தான் பணம் கட்டிவிட்டு டாக்டரை பார்க்க சென்று இருக்கிறார் என சொல்கிறார்.

அப்போது பாக்கியா யாராக இருக்கும் என தெரியாமல் டாக்டர் ரூம் ஒவ்வொன்றாக திறந்து பார்க்கிறார். ஆனால் அதில் யாரும் இல்லை. கடைசியாக ஒரு ரூமை திறந்து பார்க்க அப்போது ராதிகா கிளம்பிவிட்டு டாக்டர் மட்டும் இருக்கிறார். பாக்கியாவிற்கு என்ன நடக்கிறது என புரியாமல் இருக்கிறது. மறுபக்கம் ஈஸ்வரி கோபி வருவார் என காத்துக் கொண்டிருக்கிறார். பின் ராதிகா கோபியின் நிலைமையை பார்த்து வருத்தப்படுகிறார். அவரை எத்தனை முறை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கோம் என நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார்.

பின் பாக்கியா நர்ஸிடம் கோபி எப்படி இருக்கிறார் என கேட்க நன்றாக இருப்பதாக சொல்கிறார். அவங்க மனைவி டாக்டர் ரூமில் இருப்பதாக சொன்னீர்கள் ஆனால் அங்கே யாரும் இல்லை என பாக்கியா கேட்க அவர் இப்போ கணவரை பார்க்க ரூமிற்கு சென்று இருப்பதாக சொல்கிறார். பாக்கியா யார் அது என தெரியாமல் கோபி ரூமை நோக்கி செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here