மயூவுக்காக கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – பரிதாப நிலையில் பாக்கியா! ப்ரோமோ ரிலீஸ்!

0
மயூவுக்காக கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா - பரிதாப நிலையில் பாக்கியா! ப்ரோமோ ரிலீஸ்!
மயூவுக்காக கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா - பரிதாப நிலையில் பாக்கியா! ப்ரோமோ ரிலீஸ்!
மயூவுக்காக கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – பரிதாப நிலையில் பாக்கியா! ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை தெரிந்ததும் கோபியை விட்டு முற்றிலும் விலக வேண்டும் என்று தான் ராதிகா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், தற்போதும் மயூவுக்காக கோபியை ராதிகா ஏற்றுக் கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை மன்னித்து ராதிகா மீண்டும் ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது கோபியின் மனைவி தான் பாக்கியா என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததும் கோபியை விட்டு முழுவதுமாக விலகி விடவேண்டும் என ராதிகா நினைக்கிறார். ஆனாலும், கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கெஞ்சி கொண்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் ஒன்று சேர்ந்து கொண்டு கோபியையும் ராதிகாவைவும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே பாக்கியாவும் ராதிகாவிற்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ராதிகாவிற்கு ஆதரவாக இருக்கிறார். பாக்கியா இவ்வளவு நல்லவராக இருக்கிறார் என பாக்கியா மீது ராதிகாவிற்கு ஒரு நல்ல எண்ணம் தோன்றுகிறது. எக்காரணம் கொண்டும் பாக்கியாவிற்காகவாது நாம் கோபி ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ‘WIFI’ வசதி அறிமுகம்!

ஆனால், மயூ தற்போது கோபியை சந்திக்க வேண்டும் எனவும் கோபியிடம் பேசி பழக வேண்டும் எனவும் மிகவும் ஆசைப்படுகிறார். மயூவுக்காக கோபியை ஏற்றுக்கொள்ளும்படி ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் எடுத்துச் சொல்கின்றனர். ஆனாலும் ராதிகா தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது ராதிகா கோபியை மனதார ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ராதிகா கோபியை ஏற்றுக் கொண்டு விட்டால் பாக்கியாவின் நிலை என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here