கோபியை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும் ராதிகா – அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்!

0
கோபியை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும் ராதிகா - அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்!
கோபியை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும் ராதிகா - அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்!
கோபியை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும் ராதிகா – அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்!

கோபியை மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமா என ராதிகா யோசித்து கொண்டிருந்த வேளையில் தற்போது கோபியை ராதிகா வீட்டிற்கு வரவழைத்து திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள போகிறாரா என சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், என்ன தான் கோபி தவறு செய்திருந்தாலும் கோபியை வீட்டை விட்டு வெளியேற்றியது தவறு என மொத்த குடும்பமும் பாக்கியாவை குறை சொல்லி கொண்டிருக்கின்றனர். ஆனால், கோபி வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை நினைத்து துளியும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

கோபியுடன் வாழ சம்மதம் தெரிவித்த ராதிகா, அதிர்ச்சியில் அம்மா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

கோபியின் கவலை முழுவதுமே ராதிகா நம்மை ஏற்றுக்கொள்வாரா என்பது பற்றி தான். மேலும், ராதிகா என்ன தான் கோபியை விரட்டியடித்தாலும் கோபி மறுபடியும் மறுபடியும் ராதிகாவை தான் தேடி செல்கிறார். ஆரம்பத்தில் கோபியை விட்டு விலகியே தீரவேண்டும் என்பதில் ராதிகா உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது கோபியை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், கோபியை விட்டு விலகவும் முடியாமல் ராதிகா தவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், கோபி ராதிகாவை சந்தித்து நீ இல்லையென்றால் நான் செத்துவிடுவேன் என கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

பின்னர், ராதிகா கோபியிடம் தேவையில்லாமல் எந்தவொரு தவறான முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும், கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருங்கள் எல்லாமே நல்லதாகவே நடக்கும் என கூறுகிறார். இந்நிலையில், ராதிகா கோபி செய்ததையெல்லாம் சிந்தித்து பார்க்கிறார். பின்னர், கோபியை ராதிகா வீட்டிற்கு வரவழைத்து இப்பொழுதே என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கூறுகிறார். கோபி உட்பட மொத்த குடும்பமும் அதிர்ச்சியடையும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here