கோபியை பற்றி பாக்கியாவிடம் விசாரிக்கும் ராதிகா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!

0
கோபியை பற்றி பாக்கியாவிடம் விசாரிக்கும் ராதிகா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் திருப்பம்!
கோபியை பற்றி பாக்கியாவிடம் விசாரிக்கும் ராதிகா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் திருப்பம்!
கோபியை பற்றி பாக்கியாவிடம் விசாரிக்கும் ராதிகா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் குடும்பத்தை தெரிந்து கொள்ளும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டிருக்க, இந்த கதைக்களத்தில் அடுத்தகட்டமாக பாக்கியாவுக்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வர இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இப்போது முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. இதுவரை பாக்கியாவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவரையும், ராதிகாவையும் ஏமாற்றி வந்த கோபிக்கு விரைவில் நல்ல பதிலடி கிடைக்க இருக்கிறது. அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களத்தில் இதுவரை கோபியின் ரகசிய காதலை அறிந்துகொண்டிருக்கும் எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் அமைதி காக்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கோபி சீக்கிரமாகவே ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் கோபியின் எண்ணம் இப்போதைக்கு நிறைவேறுவது போல தெரியவில்லை. ஏனென்றால், கோபியின் மர்மமான நடவடிக்கைகள் ஈஸ்வரி உட்பட வீட்டில் உள்ள எல்லாருக்கும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. அதனால், ஒவ்வொருவரும் கோபியை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். தவிர, ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி சமாளிக்க முற்படும் கோபியை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். இது இப்படி இருக்கிறது என்றால், இதுவரை கோபியை கண் மூடித்தனமாக நம்பிய ராதிகாவுக்கும் கோபி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

நக்ஷத்திரா பற்றிய தவறான தகவல்களை பரப்பும் நடிகை ஸ்ரீ நிதி – வைரலாகும் வீடியோ! அதிர்ந்து போன ரசிகர்கள்!

அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், கோபி பற்றிய உண்மைகளை ராதிகாவிடம் நாசூக்காக சொல்லி விட்டு கிளம்ப அவருக்கு கோபி மீது சந்தேகம் எழுகிறது. இதனால் கோபியின் குடும்பத்தாரை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இதற்கிடையில், மூர்த்தி ராதிகாவை சந்தித்த விஷயத்தை தெரிந்து கொண்ட கோபி, ராதிகாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்லப்போவதில்லை என கூறுகிறார். மேலும், யார் சொல்வதையோ கேட்டு விட்டு நீ என்னை சந்தேகப்படுகிறாயா என சொல்லி கோபி ஒரு நாடகத்தை போடுகிறார்.

இருந்தாலும், வெளியே போ என்று கோபியை துரத்தும் ராதிகா மனம் மாறி அவர் சொல்லும் கட்டுக்கதைகளை மீண்டும் நம்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மறுபக்கத்தில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில் ராதிகா, கோபியின் புகைப்படத்தை பாக்கியாவுக்கு அனுப்பி அவரை தெரியுமா என்று விசாரிப்பது போலவும், இதனால் கோபியின் லீலைகள் எல்லாம் பாக்கியாவுக்கு தெரிய வருவது போலவும் காட்சிகள் அமையலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!