பாக்கியாவிற்காக ராதிகாவிடம் சண்டையிடும் எழில் – அதிர்ச்சியில் கோபி! சீரியலில் புதிய ட்விஸ்ட்!

0
பாக்கியாவிற்காக ராதிகாவிடம் சண்டையிடும் எழில் - அதிர்ச்சியில் கோபி! சீரியலில் புதிய ட்விஸ்ட்!
பாக்கியாவிற்காக ராதிகாவிடம் சண்டையிடும் எழில் - அதிர்ச்சியில் கோபி! சீரியலில் புதிய ட்விஸ்ட்!
பாக்கியாவிற்காக ராதிகாவிடம் சண்டையிடும் எழில் – அதிர்ச்சியில் கோபி! சீரியலில் புதிய ட்விஸ்ட்!

பாக்கியாவை நம்பியதற்கு காவல் நிலையம் வரை வந்துவிட்டோம் என பாக்கியா மீது ராதிகா கோபப்படுகிறார். இதனால், பாக்கியாவை ராதிகா கண்டபடி திட்டிவிடுகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ராதிகாவிடம் எழில் சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாக்கியா தான் உணவில் நஞ்சை கலந்திருப்பார் என கருதி பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கின்றனர். பாக்கியாவிடம் இருந்து உணவை வாங்கி சென்ற பிறகு கூட நஞ்சு கலந்திருக்கலாம் என்பதால் ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என ராதிகாவையும் போலீசார் கைது செய்கின்றனர்.

சிறந்த மனைவிக்கான விருது பெற்ற “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

பாக்கியாவை நம்பியதால் என்னை காவல் நிலையத்தில் உக்கார வைத்துவிட்டார் என பாக்கியா மீது ராதிகா கொலைவெறியில் இருக்கிறார். பாக்கியா ராதிகாவை சமாதானபடுத்த முயன்ற போது கூட பாக்கியாவை பயங்கரமாக திட்டிவிடுகிறார். இதன் பின்பு, பாக்கியாவை எப்படியாவது காவல் நிலையத்திலிருந்து கூட்டி வந்துவிட வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி யாரின் காலையும் அட்டென்ட் செய்யவே இல்லை.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

பின்பு செழியன் தான் பாக்கியாவை காப்பாற்ற வக்கீலிடம் பேசி கொண்டிருந்தார். ஆனாலும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தான் பாக்கியா இருக்க வேண்டும் என போலீசார் கூறிவிடுகின்றனர். உடனே, எழில் பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உணவு பரிசோதனை மையத்திற்கு சென்று பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து பாக்கியாவை வெளியே கூட்டி வருகிறார். பாக்கியாவை காவல் நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியதால் ராதிகா வீட்டிற்கு எழில் சென்று சண்டை போடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here