பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதையை முடிக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்! ரசிகர்கள் ஷாக்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதையை முடிக்கும் ராதிகா - இன்றைய எபிசோட்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதையை முடிக்கும் ராதிகா - இன்றைய எபிசோட்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதையை முடிக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்! ரசிகர்கள் ஷாக்!

ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்று நடந்த நிகழ்வுகளை ஸ்வாரஸ்யம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவியில் இல்லத்தரசிகளை மையமாக கொண்டு ஆரம்பமாகிய பாக்கியலட்சுமி தொடரில் நேற்று தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப கோபி தன் வாயை கொடுத்து மாட்டியவராக இவருடன் பாக்கியா ஒரே ரூமில் தங்கும் சூழ்நிலை அமைகிறது. அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் கோபி காலை எழுந்தவுடன் பாக்கியா தன்னுடன் இருப்பதையே மறந்து ராதிகாவுக்கு போன் செய்து குட் மார்னிங் சொல்லி டியர் என்று கொஞ்சுவதை பாக்கியா கேட்டு விடுகிறாள்.

பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு குழுவினர்களுடன் ட்ரிப் சென்ற விஜய் – குஷியில் ரசிகர்கள்!

அதன்பின்னர் கிச்சனில் சமைத்து கொண்டிருக்கும் போது ஜெனியிடம் யார் யாரையெல்லாம் டியர்ன்னு கூப்பிடுவாங்க என பாக்யா விசாரிக்க அதற்கு ஜெனி பதில் சொல்ல வருவதர்குள் ஈஸ்வரி, அந்த காலத்துல காதலியை தான் அப்படி கூப்பிடுவாங்க. உன் மாமனார் கூட என்னை அப்படி தான் கூப்பிட்டாரு என்று சொல்கிறாள். அந்த சமயம் எழிலும் யாரும் இப்போ மனைவியை அப்படி கூப்பிடுறது இல்லைம்மா கேர்ள் பிரெண்ட்ட தான் டியர்ன்னு கூப்பிடுறாங்க என சொல்ல, பாக்யா அதிர்ச்சியடைகிறாள்.

இதனிடையில் ஆபிஸ் செல்லும் எழில், புதிதாக வந்த ஜானுவுடன் நெருங்கி பேசுவதை பார்த்து அமிர்தா பொசசிவ் ஆகி கடுப்பாகிறாள். இதனை கவனிக்கு சதீஷ் எழிலிடம் அமிர்தாவுக்கு அந்த பொண்ணு உன் கூட இருக்கறது பிடிக்கவே இல்லை என சொல்ல எழில் மனதுக்குள் சந்தோஷமடைகிறான். இந்தப் பக்கம் ராதிகா பாக்யாவுக்கு போன் செய்து சாப்பாடு ரெடி ஆயிடுச்சா நேரா அங்க வந்து வாங்கிக்கவா? என கேட்கிறாள். அதற்க்கு பாக்கியா நீங்களும் வர்றீங்களா என கேட்க, ஆமா கண்டிப்பா நானும், அவரும் வருவோம் இன்னைக்கு கண்டிப்பா அவரை பார்க்கலாம் என ராதிகா சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறாள்.

வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஷர்மிளா – வெளியான அதிரடி ப்ரோமோ!

பிறகு கோபி ராதிகா வீட்டுக்கு வர ராதிகா கோபியிடம் சாப்பாடு கொடுக்க போவதைப் பற்றி சொல்கிறார். மேலும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்ல கோபி என்ன அது என கேட்க டீச்சர் பார்க்க போறோம் என சொல்கிறாள். அதற்க்கு கோபி உடனே எப்போதும் போல எனக்கு நிறைய வேலை இருக்கு அவங்கள பார்த்து பேசலாம் எனக்கு நேரம் கிடையாது என கோபி மழுப்புகிறான். அது என்ன டீச்சரை பாக்கணும்னா மட்டும் எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகுறீங்க. கண்டிப்பா இன்னைக்கு மிஸ்சே ஆகாது என சொல்லி ராதிகா உள்ளே செல்கிறார். போச்சு நான் செத்தேன்! என்ன நடக்க போகுதோ என புலம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here