தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – ராதாகிருஷ்ணன் துவக்கம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் - ராதாகிருஷ்ணன் துவக்கம்!
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் - ராதாகிருஷ்ணன் துவக்கம்!
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – ராதாகிருஷ்ணன் துவக்கம்!

தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் ரேஷன் கடைகளில் சரிவர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனை சரி செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.

ரேஷன் கடைகள்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சென்னை நகரிலுள்ள ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடைகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த மாதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட வேண்டும். அத்துடன் இதனை ஒரேடியாக மாற்ற முடியாது. அதனால் அடுத்த 3 மாதங்களில் ஓரளவு ரேஷன் கடைகள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் ரேஷன் பொருட்களை மக்கள் தாமாக முன் வந்து வாங்க வேண்டும் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

புது வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லும் கண்ணன், தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் தற்போது இவர் அதிரடியாக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது தமிழகத்தில் பாழடைந்த நிலையில் இருக்கும் ரேஷன் கடைகளை கலர்புல்லாக மாற்றும் விதமாக “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதாவது இத்திட்டத்தின்படி மிகவும் பழமையாக உள்ள ரேஷன் கடைகளுக்கு கலர் கலர் பெயிண்ட் அடிப்பது, தூய்மை பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு உதவியாக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் செயல்படலாம் என ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!