தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்? சுகாதாரத்துறை செயலாளரின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பரவல் எதுவும் இல்லாமல் மக்கள் சுதந்திரமாக நடமாடி வந்தனர். தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆதார் & பான்கார்டு இணைக்காதவர்கள் கவனத்திற்கு – ஜூலை 1ம் தேதிக்கு மேல் ரூ.1000 அபராதம்!
இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஓரளவுக்கு கொரோனா பரவல் ஆரம்பித்தது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டு தவணை முறையில் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. தற்போது வரைக்கும் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும், 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 2 தவணைத் தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளாதவர்களை உடனடியாக போட்டுக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்கத் துவங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். அதாவது கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர்கள், ஆட்சியர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.