தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர்!

2
தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையர்!
தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையர்!
தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர்!

தமிழக பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வாட்ஸ் அப் மூலம் வினாடி வினா போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வி ஆணையர் அதற்கான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

வினாடி வினா:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகளை தொடங்கி சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை நடத்தி வருகிறது. அதனை தொடர்நது தற்போது 1 – 8 வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கப்படும் என்று முதலவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வெழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதற்கடுத்தபடியாக 3, 5 ,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து அந்தந்த பாட ஆசிரியர்கள் அதை மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி 25,000 பக்தர்கள் அனுமதி!

மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆசிரியர் அதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் 3, 5 ,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நடத்தவிருக்கும் வினாடி வினா குறித்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here