தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் – அதிர்ந்து போன பள்ளிக் கல்வித்துறை!

1
தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் - அதிர்ந்து போன பள்ளிக் கல்வித்துறை!
தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் - அதிர்ந்து போன பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் – அதிர்ந்து போன பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் கல்வி படிப்பை விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கல்வி படிப்பை கை விட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கற்றல் பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் கணினி மூலமாகவோ அல்லது மொபைல் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வசதிகள் இல்லாததால் ஆன்லைன் கல்வியை முறையை தொடர முடியவில்லை.

இதனால் பெரும்பாலான ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி படிப்பை விட்டு விட்டு தினக்கூலி உள்ளிட்ட வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வி படிப்பை மேற்கொள்வதற்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகம், சீருடை, மிதிவண்டி, கணினி, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

TN TET தேர்வுக்கான சிறந்த Study Material வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!! தபால் கட்டணம் இலவசம்!!

Exams Daily Mobile App Download

இந்த நிலையிலும் தமிழகத்தில் கல்வி படிப்பை பாதியிலே முடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 5-ம் வகுப்புடன் கல்வி படிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளதாகவும், அத்துடன் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, சென்னை ஆகிய மாவட்டங்களில் 8-ம் கல்வியை தொடர முடியாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10-ம் வகுப்புக்கு மேல் கல்வியை தொடராமல் இருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I am Gopalreddy agricultural farmer from dasarapalli village Poonapally panchayat hosur taluk Krishnagiri dist Tamil Nadu I request Tamilnadu govt to send the government schools students to private school adjucent to govt schools were the strength of students are very poor or insuficiant teacher or immediately arrange private teacher to govt schools or future of Tamilnadu will become poor surely.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!