தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டுத்தேர்வு துவக்கம் – கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்தேர்வு நாளை துவங்க இருக்கும் நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலாண்டுத்தேர்வு :
தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டுத்தேர்வு துவங்க இருக்கிறது. இந்நிலையில், தேர்வு முடிவடைந்து செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் மூலமாக காலாண்டுத்தேர்வு நடைபெற இருக்கிறது.
பள்ளி & கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை – நிபா வைரஸ் எதிரொலி!
மேலும், இந்த வினாத்தாள் கசிவை தவிர்க்கும் பொருட்டு தலைமையாசிரியர் மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை மீறி வினாத்தாள் கசிந்தால் தொடர்புடைய கல்வி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமையாசிரியர்கள் கவனமாக வினாத்தாளை பதிவிறக்கம் செய்யும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.