தமிழக கோயில்களில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம் தான் – அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைப்பு!

0
தமிழக கோயில்களில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம் தான் - அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைப்பு!
தமிழக கோயில்களில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம் தான் - அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைப்பு!
தமிழக கோயில்களில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம் தான் – அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைப்பு!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கட்டண முறையில் டிக்கெட்டுகளை பெற்று தரிசனத்திற்காக செல்வோர்கள் ஒரு முறை மட்டுமே டிக்கெட்டை பயன்படுத்தும் வகையில் QR கோடு முறையில் சோதனை செய்யப்பட உள்ளது.

QR கோடு முறை:

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கட்டண டிக்கெட் தரிசனம் மற்றும் இலவச தரிசனம் ஆகிய இரண்டும் அமலில் இருந்து வருகிறது. இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத மக்கள் கட்டணம் செலுத்தி, டிக்கெட்களை பெற்று தரிசனம் செய்கின்றனர். ஆனால் இந்த டிக்கெட்டை மீண்டும் மீண்டும் சிலர் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கட்டண சேவை டிக்கெட்டுகளை QR கோடு முறையில் சோதனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, இனி தமிழகத்தில் உள்ள 530 கோயில்களில் கட்டண சேவைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் QR கோடு முறையில் தான் சோதனை செய்யப்படும் என்று கூறினார்.

பயணங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு எடுத்துள்ள அசத்தல் முயற்சி – மேற்கு வங்க முதல்வர் தொடக்கம்!

Follow our Instagram for more Latest Updates

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிப்ரவரி மாதம் தமிழகத்தில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 62 பேர் ஆன்மீக பயணமாக இலவசமாக அரசு சார்பில் அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான தொகை ரூ.50 லட்சத்தை அரசு மானியமாக வழங்க உள்ளது. கோயில்களில் உள்ள உண்டியல் எண்ணும் பணிகள் அனைத்தும் மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நெல்லை, சென்னை, கோவை ஆகிய இடங்களில் சிவராத்திரி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!