TNPSC பொது தமிழ் – புதுக்கவிதை பற்றிய குறிப்புகள்

0
TNPSC பொது தமிழ் – புதுக்கவிதை பற்றிய குறிப்புகள்

இங்கு புதுக்கவிதை பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

ந. பிச்சமூர்த்தி

காலம் : 1900 – 1976

ஊர் : கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்)

இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம்

புனைப்பெயர் : ந.பிச்சமூர்த்தி பி(பிச்சு) ந.பி

தொழில் : 1924 – 1938 வரை

வழக்குரைஞர் 1938 – 1954

கோவில் நிர்வாக அலுவலர்.

படைப்பு : கதைகள் மரபு கவிதைகள்.

புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள்

புதுக்கவிதைக்குத் தோற்றுவாய் செய்ததால் ‘புதுக்கவிதையின் பிதாமகர்’ எனப் போற்றப்படுகிறார்.

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.

தமிழில் வந்த முதல் கவிதை தொகுதி இவருடையது – புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி

இவருடைய முதல் கவிதை – நடுத்தெரு நாராயணன்

இவருடைய முதல் சிறுகதை – சயன்சுக்குப் பலி

இவருடைய முதல் வசனகவிதை – காதல் (1934)

1933 – “முள்ளும் ரோசாவும்” என்ற கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது.

புதுக்கவிதை நூல்கள்

 • காட்டுவாத்து (1962)
 • பூக்காரி
 • வழித்துணை
 • கிளிக் குஞ்சு
 • கிளிக் கூண்டு (1937)
 • நெருப்புக் கோழி
 • புதுக்குரல்கள்

பிச்சமூர்த்தி கவிதைகள்

கலைமகள் – சிறுகதை ஆசிரியர்

ஹனுமன் – துணை ஆசிரியர்

நவ இந்தியா – துணை ஆசிரியர்

மணிக்கொடி – கவிதை சிறுகதை ஆசிரியர்

சிறுகதை

 • பதினெட்டாம்பெருக்கு
 • மோகினி
 • மாங்காய் தலை
 • காபூலிக் குழந்தைகள்
 • விஜயதசமி
 • இரட்டை விளக்கு சம்பரும் வேட்டியும்

ஓரங்க நாடகங்கள் பதினொரு ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளார்.

 • புதுமைப்பெண் – கலைமகள்
 • பில்ஹணன் – மணிக்கொடி
 • நெட்டைக்கனவு – மணிக்கொடி
 • தேவடியாள் பூ – மணிக்கொடி
 • மகாராணாபிரதாப் – மணிக்கொடி
 • ஆசையும் ஆவலும் – கலைமகள்
 • ஐ.சி.எஸ் – கலைமகள்
 • விசாரணை – கிராம ஊழியன்
 • காளி – நூல் வடிவம்
 • அக்பரும் தான்சேனும் – எழுத்து
 • சிக்கனம் – எழுத்து

மேற்க்கோள்

நீயன்றி மண்ணுண்டோ விண்ணுண்டோ ஒளி
உண்டோ நிலவும் உண்டோ”
என்று பொங்கல்
வழிபாடு பாடலொன்றில் சூரியனைப்பாடுகிறார்.

சி.சு. செல்லப்பா

காலம் : 1912 – 1998

ஊர் : சின்னமனூர் (தேனி மாவட்டம்)

 • எழுத்து என்ற இலக்கிய இதழைத் தொடங்கியவர் – (1958)
 • தமிழ் சிறுபத்திரிக்கையின் முன்னோடி “எழுத்து”
 • ‘சுதந்திர தாகம்’ நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.
 • இதழாசிரியர் எழுத்தாளர் திறனாய்வாளர் நாடக ஆசிரியர் கவிஞர்
 • சுதந்திர சங்கு என்ற இதழில் முதன் முதலாக எழுதத் தொடங்கினார்.
 • மணிக்கொடி இதழ் இவரின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது.
 • “சாசாவின் பொம்மை” சிறுகதை இவரை சிறந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது.
 • 1947–1953 இல் தினமணிக் கதிரில் பணிபுரிந்தார்.

நூல்கள்

 • ஜீவனாம்சம் சுதந்திர தாகம் – புதினம்
 • வாடிவாசல் – குறும் புதினம்
 • மாற்று இதயம் – கவிதைத் தொகுதி
 • இன்று நீ இருந்தால் – குறுங்காப்பியம்
 • சரஸாவின் பொம்மை மணல் வீடு வெள்ளை சி.சு.செல்லப்பா (7-தொகுதிகள்) அறுபது சத்தியாக்ரகி – சிறுகதை தொகுதிகள்
தருமு சிவராமு

பிறப்பு : 1939 – 1997

புனைபெயர் : பிரமிள் பானுசந்திரன் அருப்சிவராம்

ஊர் : திரிகோணமலை (இலங்கை கிழக்கு  மாகாணம்)

 • படிமக்கவிஞர் ஆன்மீகக் கவிஞர்
 • ‘படிமச் சிற்பி’ ‘யுனிக் இமேஜிஸ்ட்’ என்ற சி.சு.செல்லப்பா இவரை குறிப்பிடுவார்.
 • ‘கைப்பிடி அளவு கடல்’ என்னும் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.
 • புதுக்கவிதையில் அறிவியலைப் புகுத்தியவர்.

விருதுகள்

 • நியூயார்க் விளக்கு அமைப்பு இவருக்கு “புதுமைப்பித்தன்” விருது வழங்கியது.
 • கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” என்ற விருது வழங்கியது.

நூல்கள்

 • ஆயி பிரசன்னம் லங்காபுரிராஜா – குறுநாவல்
 • கவிதைத் தொகுதிகள்
 • கண்ணாடியுள்ளிருந்து
 • கைப்பிடியளவு கடல்
 • பிரமிள் கவிதைகள்
 • மேல் நோக்கிய பயணம்
 • சிறுகதைகள்
 • காடன் கண்டது
 • நீலம்
 • பாறை
 • அசரீரி
 • கோடாறி
 • சந்திப்பு
 • சாமுண்டி
 • கிசுகிசு
 • கருடனூர் ரிப்போர்ட்
 • அங்குலி மாலா
 • நாடகம்
 • நட்சத்ரவாசி

மேற்க்கோள்

பூமித் தோலில் அழகுத் தேமல்”
“இருளின் சிறகைத் தின்னும் கிருமி என்றும் சூரிய
உதயத்தை இவர் படிமப்படுத்தும் விதம்
ரசிக்கத்தக்கது.

பசுவய்யா

பிறப்பு : 1931 – 2005

இயற்பெயர் : சுந்தர ராமசாமி

புனைபெயர் : பசுவய்யா

பிறந்த ஊர் : மகாதேவர்கோயில் கிராமம் (நாகர்கோவில் மாவட்டம்)

தொடங்கிய இதழ் : காலச்சுவடு

 •  இவரை “புதுக்கவிதை வரலாற்றில் ஒரு துருவ நட்சத்திரம்” என்பர்.
 • ‘தமிழ்க் கணினிக்கான விருது’ ‘இனம் படைப்பாளர்’ விருது இவர் பெயரில் வழங்கப்படுகிறது.

எழுதிய நூல்கள்

 • கவிதை
 • நடுநிசி நாய்கள் (1975)
 • யாரோ ஒருவனுக்காக (1987)

நாவல்கள்

 • ஒரு புளிய மரத்தின் கதை
 • ஜே.ஜே. சில குறிப்புகள்
 • குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
 • மொழிபெயர்ப்பு மொழிகள்
 • செம்மீன் (மலையாளம் – புதினம்) – தகழி சிவ சங்கரம்பிள்ளை
 • தோட்டியின் மகன் (மலையாளம் – புதினம்) – தகழி சிவ சங்கரம்பிள்ளை
 • தொலைவிலிருக்கும் கவிதைகள்

சிறுகதைகள்

 • செங்கமலத்தின் சோப்பு
 • ரத்னபாயின் ஆங்கிலம்
 • பிரசாதம்
 • அக்கரை சீமையில்
 • கைக்குழந்தை
 • தண்ணீர்
 • உணவும் உணர்வும்
 • முதலும் முடிவும்
 • சன்னல்
 • அகம்
 • உழவும் மாடும்
 • மெய்க்காதல்
 • அலைகள்
 • அழைப்பு
 • குரங்கு
 • பள்ளம்
 • தயக்கம்
 • தற்கொலை
 • களிப்பு
 • கிடாரி
 • இரண்டு முகங்கள்
 • மேல் பார்வை
 • காலிப் பெட்டி
 • வாழ்வும் வசந்தமும்
 • இதர நூல்கள்
 • காற்றில் கரைந்த பேராசை
 • மூன்று நாடகங்கள்
 • வானமே இளவெயில் மரச்செறிவே
 • இறந்த காலம் பெற்ற உயிர்
 இரா. மீனாட்சி

பிறப்பு : 1941

ஊர் : திருவாரூர்

பெற்றோர் : இராமச்சந்திரன் – மதுரம்

மீனாட்சி அல்லது ராமச்சந்திரன் என அழைக்கப்படுகிறார்.

கவிதை நூல்கள்

 • உதயநகரிலிருந்து
 • மீனாட்சி கவிதைகள்
 • தீபாவளிப் பகல்
 • செம்மண் மடல்கள்
 • சுடு பூக்கள்
 • மறுபயணம்
 • வாசனைப் புல்
 • கொடி விளக்கு
 • நெருஞ்சி
 • ஆங்கிலப் படைப்பு
 •  ‘இந்திய பெண்கவிகள் பேசுகிறார்கள்’

தொகுப்பு நூல்கள்

 • கொங்குதேர் வாழ்க்கை
 • பறத்தல் அதன் சுதந்திரம்
 • சிற்றகல்

விருதுகள்  பரிசுகள்

 • 2005 – சிற்பி இலக்கிய விருது
 • 2007 – புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது
 • 2006 – “உதயநகரிலிருந்து” என்ற புதுக்கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது.
 • 2007 – திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
 • 2010 – புதவை பாரதி விருது
 • 2010 – கவிக்கோ விருது
 • இரா.மீனாட்சி அவர்கள் சாகித்திய அகாடமி ஆலோசனைக்குழு உறுப்பினராக உள்ளார்.
சி. மணி

பிறப்பு : 1936 – 2009

இயற்பெயர் : எஸ். பழனிசாமி

புனைப்பெயர் : சி.மணி வே.மாலி

பணி : ஆங்கிலப் பேராசிரியர்

‘எழுத்து’ இதழில் எழுதிய கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

நூல்கள்

 • கவிதை
 • வரும் போகும்
 • ஒளிச் சேர்க்கை
 • இதுவரை
 • நகரம்
 • விமர்சனம்
 • யாப்பும் கவிதையும்
 • மொழிபெயர்ப்பு
 • தோண்டு கிணறும் அமைப்பும்
 • டேனியா செயல்முறைத் திட்டம்
 • தாவோதேஜிஸ்

புதுக்கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல் “யாப்பும் கவிதையும்” (1925)

டி.எஸ்.இலியட் எழுதிய “பாழ்நிலம்” என்ற கவிதையின் நேரடித்தாக்கத்தில் உருவானது “நகரம்” என்ற நூல்

விருதுகள்

 • இருமுறை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது (1983 1985)
 • ஆசான் கவிதை விருது
 • கவிஞர் சிற்பி விருது
 • விளக்கு இலக்கியப் பரிசு (2002)
சிற்பி பாலசுப்பிரமணியம்

பிறப்பு : 1936

ஊர் : “ஆத்துப் பொள்ளாச்சி” (கோவை மாவட்டம்)

இயற்பெயர் : பாலசுப்பிரமணியம்

புனைப்பெயர் : சிற்பி

பெற்றோர் : பொன்னுசாமி கண்டியம்மாள்

பெற்றோர் இட்ட பெயர் : நடராச பாலசுப்பிரமணிய சேதுராமசாமி”

வானம்பாடி இதழின் பொறுப்பாசிரியர்

படிமக் கவிஞர் வானம்பாடி இதழ்க்கவிஞர்

பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர்

சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம் கன்னடம் இந்தி மலையாளம் மராத்தி மொழிகளில் வெளிவந்துள்ளன

கவிதை நூல்கள்

 • சிரித்த முத்துக்கள் (கதைக் கவிதை)
 • நிலவுப்பூ
 • இறகு புன்னகை பூக்கும் பூக்கள்
 • சர்ப்பயாகம்
 • சிரித்த முத்துக்கள்
 • பூஜ்ஜியங்களின் சங்கிலி
 • மௌன மயக்கங்கள் (காதல் சிறுகதைக் கவிதை)
 • சூரிய நிழல்
 • மார்கழிப் பாவை
 • பாரதி கைதி எண் 203
 • இறகு
 • ஒரு கிராமத்து நதி (2002 – சாகித்திய அகாடமி விருது)
 • பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு
 • சிற்பி கவிதைப் பயணங்கள்
 • கவிதை வானம்
 • மூடு பனி
 • தேவயானி
 • மகாத்மா
 • நீலக் குருவி
 • சிறுவர் நூல்கள்
 • சிற்பி தரும் ஆத்திச்சூடி
 • வண்ணப் பூக்கள்
 • புதினங்கள்
 • அக்னி சாட்சி
 • ஒரு சங்கீதம் போல
 • வாரணாசி
 • பகுத்தாய்வு நூல்கள்
 • பாரதி மற்றும் வள்ளத்தோள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு
 • இராமலிங்க வள்ளலாரின் அருட்பா திரட்டு

உரைநடை நூல்கள்

 • இல்லறமே நல்லறம்
 • அலையும் சுவடும்
 • படைப்பும் பார்வையும்
 • நேற்றுப் பெய்த மழை
 • மின்னல் கீற்று
 • காற்று வரைந்த ஓவியம்
 • மகாகவி
 • புதிர் எதிர்காலம்
 • மனம் புகும் சொற்கள்
 • கவிதை நேரங்கள்

தொகுப்பு நூல்

 • நதிக்கரை சிற்பங்கள்

விருதுகள்

 • தமிழக அரசு விருது – மௌன மயக்கங்கள் கவிதைக்கு கிடைத்தது
 • பாவேந்தர் விருது
 • கபிலர் விருது
 • பாஸ்கர சேதுபதி விருது
 • தமிழ்நெறிச் செம்மல் விருது
 • சொல்கட்டு கவிஞர் விருது
 • மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது
 • சாகித்திய அகாடமி விருது
 • ராணா விருது

மேற்க்கோள்

கையில்லாதவன்
கண்ணில் வழியும்
நீரைத் துடைக்க
விரும்புவதைப் போல்
சுலபமாக
நிறைவேற முடியாத
ஆசைகள்
உள் மனதில் சுரக்கின்றன”.

மு. மேத்தா

பிறப்பு : பெரியகுளம் (தேனி மாவட்டம்) – 1954

முழுப்பெயர் : முகமது மேத்தா

பணி : கல்லூரிப் பேராசிரியர் திரைப்படப் பாடலாசிரியர் கதை வசனகர்த்தா

தமிழாசிரியராக இருந்து ‘வானம்பாடி’ இதழ்களில் எழுதியவர்

உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்தவர்.

படைப்புகள்

 • ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
 • மனச்சிறகு (மரபு கவிதை)
 • அவளும் நட்சத்திரம் தான் (கவியரங்கக் கவித் தொகுதி)
 • சோழ நிலா (வரலாற்று நாவல்)
 • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது – 2006)
 • கண்ணீர் பூக்கள்
 • முகத்துக்கு முகம்
 • வெளிச்சம் வெளியே இல்லை
 • அவர்கள் வருகிறார்கள்
 • நடந்த நாடகம் காத்திருந்த காற்று திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
 • நந்தவன நாட்கள் ஒரு வானம் ஒரு சிறகு
 • இதயத்தின் நாற்காலி

மேற்க்கோள்

தாஜ்மஹாலின் காதிலே ராம காதை ஓதலாம்” – சமய நல்லிணக்கம்

மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை”
“நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்”

உலகெங்கும் இதழ் இதழாக
இந்த பூக்கள்
உதிர்ந்து விழுவது யாருக்காக”

ஈரோடு தமிழன்பன்

காலம் : 1940

ஊர் : சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)

இயற்பெயர் : ஜெகதீசன்

புனைப்பெயர் : விடிவெள்ளி ஈரோடு தமிழன்பன்

பெற்றோர் : நடராஜா – வள்ளிம்மாள்

பணி : தமிழ் பேராசிரியர்

முனைவர் பட்டம் : தனிப்பாடல்கள் பற்றிய ஆய்வாகும்.

விருது பரிசு

• சாகித்திய அகாடமி விருது – “வணக்கம் வள்ளுவ” (கவிதை)
• தமிழக அரசு பரிசு – “தமிழன்பன் கவிதைகள்”

அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

“அரிமா நோக்கு” என்ற ஆய்வு இதழ் ஆசிரியர்

ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்

படைப்புகள்

 • சூரியப் பறவைகள்
 • தோணி வருகிறது
 • தீவுகள் கரையேறுகின்றன
 • விடியல் விழுதுகள்
 • நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
 • காலத்திற்கு ஒரு நாள் முந்து
 • சிலிர்ப்புகள்
 • பொதுவுடைமைப் பூபாளம்

மேற்க்கோள்

கபாலக் கல்லறையின் முனையில் புதைக்கும்
கல்விக்கு பதிலாய்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைக்கும்
கம்பீரமான கல்வி” (புதிய கல்வி முறை வேண்டும்.)
“சிலம்பை உடைத்து என்னபயன்
அரியணையிலும் அந்தக் கொல்லன்”

அப்துல் ரகுமான்

பிறப்பு : 1937 மதுரையில் பிறந்தவர்

பணி : தமிழ்த்துறை பேராசிரியர் (வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி) முனைவர்

பட்ட ஆய்வு : புதுக்கவிதையில் குறியீடு

மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்”

கவிதை நூல்கள்

 • பால் வீதி
 • ஆலாபனை
 • நேயர் விருப்பம்
 • வசன கவிதை
 • சுட்டுவிரல்
 • முட்டைவாசிகள்
 • மரணம் முற்றுப்புள்ளி அல்ல
 • அவளுக்கு நிலா என்று பெயர்
 • ஆல்போல் விழுந்தவன்
 • உன் கண்ணால் தூங்கிக் கொள்கின்றேன்
 • பாலை நிலா
 • காக்கைச் சோறு
 • ஆய்வு நூல்
 • புதுக்கவிதையில் குறியீடு
 • 1999 – சாகித்திய அகாடமி விருது – “ஆலாபனை கவிதை நூல்
 • ‘கவிக்கோ’ என்று அழைக்கப்பட்டார்
 • ‘கவிக்கோ’ இதழை இவர் நடத்தினார்.

விருதுகள்

 • தமிழன்னை விருது
 • அட்சரா விருது
 • பாரதிதாசன் விருது
 • கலைமாமணி விருது
 • முரசொலி அறக்கட்டளை விருது
கலாப்ரியா

பிறப்பு : 1950 – (திருநெல்வேலி)

இயற்பெயர் : டி.கே. சோமசுந்தரம்

பெற்றோர் : கந்தசாமி – சண்முகவடிவு

பணி : வங்கி அதிகாரி

கசடதபற கணையாழி தீபம் வானம்பாடி தெறிகள் சுவடு ‘ழ’ ஆகிய இதழ்களில் கவிதை எழுதியவர்.

“பொருனை” என்ற இதழின் ஆசிரியர் முழு உறுப்பினர்

“ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண்கவிதைகள்” என்று கலாப்ரியாவின் கவிதைகள் தி.ஜானகிராமனால் பாரட்டப்பெற்றது.

கவிதை நூல்கள்

 • வெள்ளம்
 • தீர்த்த யாத்தரை
 • உலகெல்லாம் சூரியன்
 • மற்றாங்கே
 • எட்டயபுரம்
 • சுயம்வரம்
 • அனிச்சம்
 • வனம் புகுதல்
 • எல்லாம் கலந்த காற்று
 • நான்நீமீன்
 • ஞானபீடம்

கட்டுரை நூல்கள்

 • நினைவின் தாழ்வாரங்கள்
 • ஓடும் நதி
 • உருள்பெருந்தேர்

விருதுகள்

 • கலைமாமணி
 • கவிஞர் சிற்பி இலக்கிய விருது
 • விகடன் விருது
 • சுஜாதா விருது
 • கண்ணதாசன் இலக்கிய விருது

மேற்க்கோள்

அழகாய் இல்லாததால் “தொலைவில் புணரும் அவள் எனக்குத் தண்டவாளங்கள்
தங்கையாகிவிட்டாள்” அருகில் போனதும்அவளின் பார்வை’ விலகிப் போயின” ‘சாத்தனும்’

கல்யாண்ஜி

இயற்பெயர் : எஸ். கல்யாண சுந்தரம்

பிறப்பு : 1946

ஊர் : திருநெல்வேலி

புனைப்பெயர் : கல்யாண்ஜி வண்ணதாசன்

பணி : வங்கி அதிகாரி

இவரின் தந்தையார் புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் – தி.க. சிவசங்கரன்

இவர் ‘தீபம்’ என்ற இதழில் எழுதத் துவங்கியவர்

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றவர்.

 புதினங்கள்

 • சின்னு முதல் சின்னு வரை
 • கவிதை நூல்கள்
 • புலரி
 • இன்று ஒன்று நன்று
 • கல்யாண்ஜி

கவிதைகள்

 • மணலுள்ள ஆறு
 • மூன்றாவது
 • அந்நியமற்ற நதி
 • முன்பின்
 • ஆதி
 • நடுகை
 • கட்டுரை
 • அகமும் புறமும்

சிறுகதை நூல்கள்

 • கலைக்க முடியாத ஒப்பனைகள்
 • உயர பறத்தல்
 • தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
 • சமவெளி
 • பெயர் தெரியாமல் ஒரு பறவை
 • கனிவு
 • நடுகை
 • உயர பறத்தல்
 • ஒளியிலே தெரிவது
 • சில இறகுகள் சில பறவைகள்
 • கடிதம்
 • வண்ணதாசன் கடிதங்கள்

மேற்க்கோள்

எனக்கு வேலை கிடைத்து விட்டது
இனிமேல் நானும் கேட்கலாம்
இப்ப என்ன செஞ்சுகிட்டு இருக்க?”

ஞானக்கூத்தன்

பிறப்பு : 1938 – திரு.இந்தர் (தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ளது)

இயற்பெயர் : ரங்கநாதன்

புனைப்பெயர் : ஞானக்கூத்தன் (1960)

முதல் கவிதை : ‘பிரச்சனை’ (1968)

திருமூலரின் திருமந்திரத்தைப் படித்த பின் தனது பெயரை ஞானக்கூத்தன் என மாற்றிக் கொண்டார்.

இவரைக் ‘கவிஞர்களின் கவிஞர்’ என்பர் அன்று வேறு கிழமை’ இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பாகும்.

2010 ல் சாரல் விருது பெற்றுள்ளார்.

1998 – ல் “ஞானக்கூத்தன் கவிதைகள்” என்று வெளியிடப்பட்டது

கவிதை நூல்கள்

 • அன்று வேறு கிழமை
 • சூரியனுக்குப் பின்பக்கம்
 • கடற்கரையில் சில மரங்கள்
 • மீண்டும் அவர்கள்

இதர நூல்கள்

 • இரட்டை நிழல்
 • திருப்தி
 • நம்மை அது தப்பாதோ?
 • சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு
 • அலைகள் இழுத்த பூ மாலை
 •  அங்கத கவிதைகள்
 • தோழர் மோசிகீரனார்
 • அதனால் என்ன

மேற்க்கோள்

மோசிகீரோ மகிழ்ச்சியினால் மரியாதையை நான் குறைத்தற்கு மன்னித்தருள வேண்டும் நீ சொந்தமாக உனக்கிருக்கும் சங்கக்கவிதை யாதொன்றும் படித்ததில்லை நான் இன்னும் ஆனால் உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு இரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல் மனிதன் நீதான் என்னும் காரணத்தால்”

தேவதேவன்

இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம்

புனைப்பெயர் : தேவதேவன்

பிறப்பு : 1948 – இராஜாகோயில் (விருதுநகர் மாவட்டம்)

பணி : இடைநிலை ஆசிரியர் (தூத்துக்குடி நகராட்சி பள்ளி) ஈ.வே.ராமசாமி இவருக்கு கைவல்யம் என்ற பெயரை இட்டார்.

இவரின் முதல் கவிதை தொகுப்பு ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ (1982)

இரண்டாவது கவிதை தொகுப்பு ‘மின்னற்பொழுதே தூரம்’ பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது.

2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ‘வேதேவன் கவிதைகள்’ என்ற கவிதை நூலுக்கு பரிசு வழங்கியது.

1970 – 80 களில் தூத்துக்குடியில் கலைப் படங்களுக்கான திரைப்பட சங்கம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

கவிதை நூல்கள்

 • விடிந்தும் விடியாத பொழுது
 • நுழைவாயிலிலேயே நின்று விட்ட கோலம்
 • புல்வெளியில் ஒரு கல்
 • சின்னஞ் சிறிய சோகம்
 • விண்ணளவு பூமி
 • குளித்துக் கரையேறாத கோபியர்கள்
 • நட்சத்திர மீன்
 • மின்னற்பொழுதே தூரம்
 • பூமியை உதறி எழுந்த மேகங்கள்
 • மாற்றப்படாத வீடு

மேற்க்கோள்

பொருளை தேடுபவர்கள் அன்பை அடைவதில்லை
இன்பத்தையே விழைபவர்கள் நிறைவை அடைவதில்லை
ராணுவத்திற்கு கோரிக்கைகளுக்கும் பெருஞ்செலவு
புரியும் உலகிலன்றோ நாம் வாழ்கிறோம்.”

சாலை இளந்திரையன்

காலம் : 1930 – 1998

ஊர் : சாலைநயினார் பள்ளிவாசல் (திருநெல்வேலி மாவட்டம்)

இயற்பெயர் : வ. இரா. மகாலிங்கம்

பெற்றோர் : இராமையா அன்னலட்சுமி

பணி : தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகித் தமிழ்த்துறைத் தலைவரானார்.

முனைவர் பட்டம் : “தமிழ்ப் பழமொழிகளும் சமுதாயமும்” என்ற தலைப்பில் ஆய்வு

விருது : 1991 – இல் தமிழக அரசின் பாவேந்தர் விருது மற்றப்பெயர்

 • பிள்ளைப் பாண்டியன்
 • எழுச்சிச்சான்றோர்
 • காஞ்சித்தலைவன்
 • திருப்புமுனை சிந்தனையாளர்
 • கனக்காடு சா.பெரிய பெருமாள்
 • வீதியூர் நிதிக்கிழார்
 • நிறுவ காரணமாக இருந்தவர்
 •  உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம்
 •  இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கழகம்
 •  தில்லித்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
 •  உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

நூல்கள்

 • பூத்தது மானுடம்
 • காக்கை விமு தூது
 • புரட்சி முழக்கம்
 • அன்னை நீ ஆட வேண்டும்
 • சிலம்பின் சிறுகதை
 • காலநிதி தீரத்திலே
 • வீறுகள் ஆயிரம்
 • கொட்டியும் ஆம்பலும் நஞ்சருக்க பஞ்சணையா?

 “உரைவீச்சு” என்ற புது இலக்கிய வடிவத்தையாக்க பெருமுயற்சி செய்தவர் உரைவீச்சு உள்ளதை உள்ளபடி காவல் துப்பாக்கி ஏழாயிரம் எரிமலைகள் இவை உரைவீச்சாக வந்த நூல்களாகும்.

புரட்சி முழக்கம் உரைவீச்சு – நூல்களுக்கு தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியது.

மேற்க்கோள்

காசைப் பணத்தைப் பணியாதே – அதன்
கட்டளை ஏற்றுக் குளியாதே”

இன்றினைப் பானுவம் என்றிருந்தால் வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்
சென்றிளைப் பாறுக முற்றிடத்தே தம்பி
தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே”

பூத்தது மானுடம் – “நிற்க நேரமில்லை”

சாலினி இளந்திரையன்

காலம் : 1933 – 2000

ஊர் : விருதுநகர்

இயற்பெயர் : கனகசவுந்தரி

பெற்றோர் : சங்கரலிங்கம் சிவகாமியம்மாள்

கணவர் : சாலை இளந்திரையன்

பணி : புதுடில்லி திருவேங்கடவன் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முதல்வராக உயர்ந்து ஓய்வு பெற்றவர்.

முதுவர் பட்டம் : “சிலப்பதிகாரச் சொல்வளம்” என்ற தலைப்பில் ஆய்வு

முனைவர் பட்டம் : “தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஆய்வு

முதல் கட்டுரை : வாடா மலர்

இதழ் :

ஆனந்த போதினி – இதழில் கட்டுரை எழுதினார்

மனித வீறு – நடத்திய இதழ் (1987)

வீரநடை அறிவியக்கம் – பணியாற்றிய இதழ் (1992 1993) சொற்பொழிவு நூல்

‘சங்கத் தமிழரின் மனித நேய நெறிகள்’

படைப்புகள்

 • பண்பாட்டின் சிகரங்கள் (நாடக இலக்கியத் திறனாய்வு)
 • வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
 • களத்தில் கடிதங்கள்
 • சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள் ஆசிரியப் பணியில் நான்
 • குடும்பத்தில் நான்

நாடக நூல்கள்

 • படுகுழி
 • எந்திரக் கலப்பை
 • புதிய தடங்கள்
 • சாலை இளந்திரையனுடன் சேர்ந்து எழுதிய நூல்கள்
 • இரண்டு குரல்கள்
 • தமிழ்க் கனிகள்
 • தமிழனே தலைமகன்
 • தமிழ் தந்த பெண்கள்
ஆலந்தூர் மோகனரங்கன்

பிறப்பு : 1942 ஆலந்தூர் (சென்னை அடுத்து உள்ளது)

பெற்றோர் : ம.கோபால் மற்றும் கோ. மீனாம்பாள்

பட்டம் : கவிவேந்தர்

தமிழக அரசு பரிசு : ‘இமயம் எங்கள் காலடியில் என்ற நூல்

படைப்புகள்

 • காப்பிய நூல் – கனவுப்பூக்கள்
 • கவிதை நூல்
 • இமயம் எங்கள் காலடியில்
 • மோகனரங்கன் கவிதைகள்
 • சித்திரப் பந்தல்
 • காலக்கிளி

கவிதை நாடகங்கள்

 • வைரமூக்குத்தி
 • புதுமனிதன்
 • யாருக்குப்பொங்கல்
 • கயமையைக் கறைவோம்
 • மனிதனே புனிதனவாய்
 • வாழ்க்கை வரலாற்று நூல்
 • வணக்கத்துக்குரிய வரதராசனார்
 • சிறுவர் கவிதை நூல்கள்
 • பள்ளிப் பறவைகள்

சிறுவர் கதைகள்

 • கடமை செய்தால் களிப்பு வரும் தன்னம்பிக்கை தலைவன் ஆக்கும்.
 • கல்வி உன்னைக் காப்பாற்றும் அன்பு செய்வதே அழகு.
 • கொய்யாத்தோப்பு
 • கள்ளனுக்குப்பாதி குள்ளனுக்குப்பாதி
 • முயன்றால் முன்னேறலாம்.

நாவால்

நினைத்தாலே இனிப்பவளே உரைநடை நாடகம் சவால் சம்பந்தம்

பொன்னம்மா புதுமைப்பெண் என்ற நாடகத்திற்கு ஏ.வி.எம். தங்கப் பதக்கம் கிடைத்தது.

2009 முதல் ‘குறும்பா’ என்னும் பெயரிலும் “குறுந்தொகையின் குழந்தைகள்” என்ற பெயரிலும் ஹைக்கூக் கவிதைகள் எழுதியுள்ளார்.

 பொது தமிழ் – புதுக்கவிதை பற்றிய குறிப்புகள் PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!