ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் உடல் நலனின் அக்கறை கொண்டு அனைத்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கையின் முதற்கட்ட பணியாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. இதற்கிடையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்காக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலம் அலகுத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு!
இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளும் தொடர்ச்சியாக ஊரடங்கை நீட்டித்தும் 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பாதிப்புகள் ஓரளவு குறைந்து வருகிறது. அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையும் கலந்தாலோசித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாப்பிலும் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், இதை மாநில பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.