பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் முதல் விருப்பமாக வங்கி வேலை விளங்குகிறது. இளைஞர்கள் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறைகளில் வங்கி வேலை பெற முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி 145 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள ஆர்வலர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம் இதோ:

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால் தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதன் அடிப்படையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் Specialist Officers (SO) பணியில் 145 இடங்கள் காலியாக உள்ளன. இந்த அறிவிப்பு அடிப்படையில் மேலாளர் (ரிஸ்க்) பணியில் 40 காலியிடங்கள், மேலாளர் (கிரெடிட்) பணியில் 100 காலியிடங்கள், மூத்த மேலாளர் பணியில் 5 காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 22 முதல் மே 7ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி ஜூன் 12 ஆகும்.

6 நாட்கள் நீண்ட வார இறுதி விடுமுறைகள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இந்த காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது தகுதி 25 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பதாரர்களின் வயது தகுதி என்பது 01/01/2022 தேதியின்படி கணக்கீடு செய்யப்படும். வயது வரம்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கபடும். அதுவே இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு 5 ஆண்டுகளும், 1984ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கபடும்.

ExamsDaily Mobile App Download

மேலும் தொடர்புடைய கல்வித் தகுதியை முடித்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் தொடர்புடைய துறை சார்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ஆகியோர் தலா ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தினால் போதுமானது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் தலா ரூ.850 மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, வயது தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!