அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பு – டிச. 08 வரை பணிகள் பாதிப்பு!

0
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பு – டிச. 08 வரை பணிகள் பாதிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்:

இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களும் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கொரோனா காலகட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி தொகையை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தை புரட்டி போட போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!

இதற்கு மத்தியில் பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள அகவிலைப்படி, ஒப்பந்த ஊழியர்களையும் முறைப்படுத்தக் கோரியும் ஈடுபட்ட வேலை நிறுத்த போராட்டத்தை டிச.08ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!