விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழிற்கு அடித்த ஜாக்பாட் – ரூ.25 லட்சம் பரிசு!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' புகழிற்கு அடித்த ஜாக்பாட் - ரூ.25 லட்சம் பரிசு!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' புகழிற்கு அடித்த ஜாக்பாட் - ரூ.25 லட்சம் பரிசு!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழிற்கு அடித்த ஜாக்பாட் – ரூ.25 லட்சம் பரிசு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் புகழ். அவர் தற்போது அமேசான் ப்ரைம் நடத்திய ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று 6 மணி நேரத்தில் 25 லட்சம் ரூபாயை பரிசுத்தொகையாக பெற்றுள்ளார்.

நடிகர் புகழ்:

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் நடிகர் புகழ். அதில் அவருடைய திறமைகள் பல வெளியாகாமல் இருந்த நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலமாக பிரபலமடைந்தார். சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் புகழ் கலந்து கொண்டதால் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும் தொடங்கியது. அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

“செம்பருத்தி” சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், ஷிவாங்கி, தர்ஷா குப்தா என அனைவருக்கும் வெள்ளித்திரையில் படவாய்ப்புகள் வந்தது. மேலும் புகழுக்கும் ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்துள்ளது. குக் வித் கோமாளியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ஒரு படம், அருண் விஜயுடன் ஒரு படம் சபாபதி என்கற தலைப்பில் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவரை சில வாரங்களாக விஜய் டிவி பக்கம் காண முடிவதில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் சார்பில் ஒரு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் விஜே விக்னேஷ் காந்த், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்த்தி, பிரேம்ஜி, அபிசேக் குமார், சதீஷ், மாயா, புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடைசி வரை நகைச்சுவை செய்பவர்கள் சிரிக்கக்கூடாது. அதே போல புகழ் கடைசி வரை சிரிப்பை அடக்கி போராடி வென்றார். 6 மணி நேர போட்டியின் இறுதியில் அவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தான் நடிகர் விவேக் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!