“குக் வித் கோமாளி” புகழ் பிறந்தநாளில் சப்ரைஸ் செய்த காதல் மனைவி – அவரே வெளியிட்ட பதிவு!

0
"குக் வித் கோமாளி" புகழ் பிறந்தநாளில் சப்ரைஸ் செய்த காதல் மனைவி - அவரே வெளியிட்ட பதிவு!
“குக் வித் கோமாளி” புகழ் பிறந்தநாளில் சப்ரைஸ் செய்த காதல் மனைவி – அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் புகழ். அவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி பென்சி அவருக்கு சப்ரைஸ் செய்து இருக்கிறார்.

நடிகர் புகழ்:

சின்னத்திரையில் சாதாரண ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையால் தற்போது சினிமாவில் கலக்கி வருபவர் நடிகர் புகழ். குக் வித் கோமாளியின் புகழ் எபிசோடுகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். தன்னுடைய இயற்கையான நகைச்சுவை குணத்தால் பலரது மனதை கவர்ந்த அவர் தற்போது பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புகழ் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறிய வீட்டில் இருப்பதை நினைத்து வருத்தப்படும் கதிர்.. ஒற்றுமையாக இருப்பதே சந்தோசமாக நினைக்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அவருடைய திருமணத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் அவருடைய மனைவி பென்சி முஸ்லீம் என்பதால், இந்து முறைப்படி திருமணமும், முஸ்லீம் முறைப்படி திருமணமும் செய்து கொண்டார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தது. இந்நிலையில் அண்மையில் புகழின் பிறந்தநாள் வந்தது. அதில் அவருடைய மனைவி பென்சி சப்ரைஸ் செய்து இருக்கிறார். மேலும் தன்னுடைய காதல் கணவருக்கு பிறந்தநாள் பரிசு ஒன்றாக நாய் குட்டியை வழங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை புகழ் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, “ரொம்ப நன்றி.. ஆனா சர்ப்ரைஸ் னு ஒன்னு பண்ண பாரு தங்கம்.. வேற லெவல்” என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தம்பதிக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!