ரூ.33,000/- ஊதியத்தில் மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு..!

0
ரூ 33,000 ஊதியத்தில் மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு..!
ரூ 33,000 ஊதியத்தில் மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு..!
ரூ.33,000/- ஊதியத்தில் மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு..!

புதுச்சேரி மின்வாரிய துறை வெளியிட்ட அறிவிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் காலியாக உள்ள Junior Engineer பணியிடங்களை நிரப்ப போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Junior Engineer பணியிடம் காலியாக இருப்பதாகவும், மேலும் இந்த பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Puducherry EB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • புதுச்சேரி மின்வாரிய துறையில் கடந்த சில நாட்களுக்கு முன் Junior Engineering பணிக்கு என்று 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Diploma, Degree in Electrical Engineering / Electrical & Electronics Engineering முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 3 வருடம் field of operation and maintenance of power system transmission and distribution போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் 31.1.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • OBC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு வயது தளர்வுகளும், SC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வுகளும், PWD (General) வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு வயது தளர்வுகளும், PWD (OBC) வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு வயது தளர்வுகளும், PWD (SC) வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • Junior Engineer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.33,000/- ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பத்தை 18.3.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்தவர்கள் மட்டும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.4.2022 இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Puducherry EB Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!