புதுச்சேரியின் முதல்வராக என் ரங்கசாமி – இன்று பிற்பகல் பதவியேற்பு!!

0
புதுச்சேரியின் முதல்வராக என் ரங்கசாமி - இன்று பிற்பகல் பதவியேற்பு!!
புதுச்சேரியின் முதல்வராக என் ரங்கசாமி - இன்று பிற்பகல் பதவியேற்பு!!
புதுச்சேரியின் முதல்வராக என் ரங்கசாமி – இன்று பிற்பகல் பதவியேற்பு!!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய முதல்வராக என்.ரங்கசாமி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்கிறார். துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழா:

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி புதுச்சேரியின் புதிய முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கவுள்ளார். இவர் நான்காவது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2 முறை முதலமைச்சராகவும், 2011 ல் என்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஒரு முறை முதல்வராகவும் பதவி வகித்திருக்கிறார். தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்று பதவியேற்க உள்ளார். இவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு – அரசுக்கு அதிமுக கோரிக்கை!!

இதன் படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற உள்ளது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!