குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு!
புதுவையில் பெண்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 57 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது திமுக கட்சியினர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார்கள். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசிடம் நிதிக்கு ஒப்புதல் பெற்ற பின்னரே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுமார் 11,000 கோடி நிதி ஒதுக்குமாறு புதுவை அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 10,000 ஆசிரியர் காலியிடங்கள் – அமைச்சர் பேட்டி!
அதனை தொடர்ந்து 21 வயது முதல் 57 வயது வரையுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசு துறை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். காரைக்காலில் அரசு மருத்துவமனை கட்டப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.802 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட் தாக்கல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
It is ok to Real BPL cardholders, but bogus cardholders how to identify.