புதுச்சேரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்மொழி கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்மொழி கட்டாயம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு தமிழக பாடத்திட்டத்தின்படி பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. மேலும், இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்யலாம் எனவும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
CSB வங்கி வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆனால், மாணவர்களிடையே தமிழ் மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதற்கு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சமூக நல அமைப்பாளர்கள் தமிழ் மொழியை புதுச்சேரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். அதனால், புதுச்சேரி மாநில முதல்வர், மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்