ஜூலை 26 முதல் 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
ஜூலை 26 முதல் 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஜூலை 26 முதல் 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஜூலை 26 முதல் 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மத்தியபிரதேச மாநிலத்தில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதால் அரசு அதற்கான நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் குறைந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்துள்ள மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் நல்ல முறையில் குறைந்துள்ளதால் அரசு பள்ளிகளை ஜூலை 26ம் தேதி முதல் திறக்க இருப்பதாக அறிவித்தது.

ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியுமா? ஆணையம் விளக்கம்!

கடந்த வாரம் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளை திறப்பது குறித்த அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் அரசின் இந்த வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறையின் கீழ் வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களை ஜூலை 26 முதல் 31 வரை தடுப்பூசி போடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெய்ன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, மாவட்ட தலைமையகம் மற்றும் மேம்பாட்டுத் தொகுதிகளில் உள்ள கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட தேதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகை, அருங்காட்சியகம் திறப்பு – நேர கட்டுப்பாடுகள்!

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • ஜூலை 26 முதல் 50 சதவீத மாணவர் வருகையுடன் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
  • 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் முதல் வாரத்திற்கு ஒரு முறை மீண்டும் தொடங்கும்.
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை வகுப்புகள் நடத்தப்படும், மேலும் ஆன்லைன் வகுப்புகளும் நடக்கும்.
  • 11 ஆம் வகுப்பு மாணவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளிலும் நேரடி வகுப்புகள் நடக்கும்.
  • 9 ஆம் வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமையும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் புதன்கிழமையும் பள்ளிக்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நோய் பரவலை தடுக்கும் வகையில், காலை வழிபாட்டு கூட்டம் மற்றும் நீச்சல் வகுப்புகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here