
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 2021-2022 ம் ஆண்டிற்கான 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
மேலும் இந்த மாணவர்களுக்கு தரவரிசையை இறுதி செய்வதற்கான ரேண்டம் எண், கடந்த 2ம் தேதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதையடுத்து மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. மேலும் இந்த தரவரிசை பட்டியலின் அடிப்படையில் தான் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் வருகிற 20ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகளுக்கும்,அதனை தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் 7.5% இடஒதுக்கீட்டிற்கு 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சாய்ஸ் பில்லிங் என்ற ஆன்லைன் விருப்ப பதிவு முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் முதல் கட்ட கவுன்சிலிங் 23ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதையடுத்து தொழில் பாடப்பிரிவு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் 25ம் தேதி பொது கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அதாவது நான்கு சுற்றுகளாக அக். 21 வரை பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மேலும் அக்.22 மற்றும் 23ம் தேதிகளில் துணை கவுன்சிலிங் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை தவிர பொது கவுன்சிலிங்கில் நிரம்பாமல் காலியாக இருக்கும் அருந்ததியர் பிரிவு இடங்களை மற்ற பட்டியலினத்தவருக்கு மாற்றி ஒதுக்கும் கவுன்சிலிங் அக்.24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக முன்கூட்டியே வைப்பு தொகை செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்த பின் 7 நாட்களுக்குள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்த மாணவருக்கு அந்த இடம் மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கவுன்சிலிங்கில் மீண்டும் பங்கேற்கவும் முடியாது என்ற கட்டுப்பாடு இந்த ஆண்டு அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.