
தமிழக அரசு பள்ளிகளில் அலுவலக பணியாளர்கள் நியமனம் – புதிய உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் அலுவலக பணியாளர்கள் இடத்தில் தகுதியானவர்களை நிரப்ப அனைத்து மாவட்ட முதன்மை முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலுவலக பணியாளர்கள்
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாசார அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசுப்பள்ளிகளில் நிர்வாகம் மற்றும் அலுவலக பணிகளை கவனிப்பதற்காக உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட ஆசிரியரல்லாத ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் கூறியிருப்பதாவது, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் மாவட்ட வாரியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை சரியானதா என்று உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் உதவியாளர், எழுத்தர்களை கண்டறிய வேண்டும்.
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க தடை – மத்திய அரசு அதிரடி!
அவர்களை அருகில் உதவியாளர் தேவைப்படும் பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். இதையடுத்து ஒரு பள்ளியில் ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர் பணிபுரிந்தால் அப்பள்ளியில் கடைசியாக பணியில் சேர்ந்த இளையவரை பணிநிரவல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக உள்ள பணியிடங்களின் விவரங்களை கண்டறிந்து மாவட்ட வாரியாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனடியாக செய்து அரசுக்கு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Sir,
Good News, about our Directorate of School Education have to desired every schools have unofficial staffs are will be select and work fulfillment progress through via CEO sir. It will fully based on as per GO’s as soon as launch early.
Thanking you,
Yours faithfully
Er V. Selvaraj, BDO-BEO