பள்ளி & கல்லூரிகளில் இனி முகக்கவசம் கட்டாயம் – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
பள்ளி & கல்லூரிகளில் இனி முகக்கவசம் கட்டாயம் - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பள்ளி & கல்லூரிகளில் இனி முகக்கவசம் கட்டாயம் - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பள்ளி & கல்லூரிகளில் இனி முகக்கவசம் கட்டாயம் – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்ட மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில அரசுகள், பொது மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கூட கொரோனா புதிய பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், ‘கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த செயல்பாடுகளை உறுதி செய்ய மார்ஷல்களை நியமித்து போலீசாரின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

பாக்கியாவிற்கு ஆறுதல் சொன்ன ராமமூர்த்தி, பாக்கியாவை நினைத்து கவலைப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

மேலும், மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிறுவன ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். சொந்த வாகனங்கள் மற்றும் பஸ், ரயில் ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கூடுதலாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!