தமிழக அரசு பள்ளி கட்டிடங்களில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு – செயல்முறைகள் வெளியீடு!

0
தமிழக அரசு பள்ளி கட்டிடங்களில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு - செயல்முறைகள் வெளியீடு!
தமிழக அரசு பள்ளி கட்டிடங்களில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு - செயல்முறைகள் வெளியீடு!
தமிழக அரசு பள்ளி கட்டிடங்களில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு – செயல்முறைகள் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடரால் தாக்கப்படாதவாறு பாதுகாக்க சில வழிகாட்டுதல் செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

பேரிடர் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் பல சேதமடைந்திருப்பதாலும், அவற்றை பராமரிக்கும் வகையில் இடி, மின்னல் போன்ற பேரிடர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டுதல் செயல்முறைகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, உயரம் அதிகமுள்ள பள்ளி கட்டிடங்களில் இடி, மின்னல் தாங்கியின் தேவை உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். பள்ளி கட்டிட வடிவமைப்பின் போது, கட்டிட வடிவமைப்பாளர், அமைப்பாளர், இடி, மின்னல் தாங்கி பொறியாளர் ஆகியோருடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

பள்ளிகளில் உள்ள பொருட்கள் வைப்பறை, வெடி பொருட்கள் தயாரிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதிகமான மழையுடன் கூடிய இடி, மின்னல் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செயல்படும் நேரங்களில், இடி, மின்னல், மழை இவற்றின் தாக்கம் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீடு – அரசுக்கு வலியுறுத்தல்!

இத்தகைய காலங்களில் மாணவர்களை கான்கிரீட் கூரைகள் அமைக்கப்பட்ட வகுப்பறைகளில் அமர்த்திவைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் இருக்கும் இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட கட்டடங்களில் விவரங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் இடிதாங்கி அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றை மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த தகவல்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இயற்கை மேலாண்மைக்கான காலாண்டு அறிக்கையுடன், கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அவற்றை நாட்டு நலப்பணி திட்டத்தின் இணை இயக்குனரது [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!