TNUSRB (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

0
TNUSRB (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - கால அட்டவணை வெளியீடு!
TNUSRB (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - கால அட்டவணை வெளியீடு!TNUSRB (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - கால அட்டவணை வெளியீடு!
TNUSRB (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் SI பணிக்கான எழுத்துத் தேர்வின் தற்காலிக அட்டவணையை என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது தேர்வு, கல்வித்தகுதி, பாடத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

SI தேர்வு:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2,2A தேர்வு மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்புகள் வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகளும் முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் காவல் துறையில் உள்ள காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தது. இந்த SI தேர்வு 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு SI தேர்வு நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

நடப்பாண்டு தேர்வுக்கான விண்ணப்பபதிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. விண்ணப்பிக்க விரும்புவோர் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வு செயல்முறையானது, எழுத்துத் தேர்வு ஆகியவற்றை கொண்டிருக்கும். தேர்வர்கள் உடல் திறன் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு, சகிப்புத்தன்மை தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் எழுத்து தேர்வில் தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு புறநிலை வகை வினாக்களாக இருக்கும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!

இத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும் அடுத்த கட்ட மதிப்பீட்டிற்குத் தகுதி பெற தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் கட்டாயம் ஆகும். தற்போது விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வு தேதி குறித்து கேள்வி எழுப்பபட்ட நிலையில் தேர்வின் தற்காலிக அட்டவணை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!