தமிழகத்தில் பொது போக்குவரத்து பயன்பாடு அதிகம் – பெட்ரோல், டீசல் விலை எதிரொலி!
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அரசின் பொது போக்குவரத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர்.
விலை உயர்வு:
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பெட்ரோல், டீசல், விலையை நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் சமீப காலமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 110 ஐ தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றுக்கு மத்தியில் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Exams Daily Mobile App Download
இதற்கு மத்தியில் தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மேலும் நாட்டில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதன் பிறகு கடந்த மே மாதம் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இருப்பினும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் புதிய மருத்துவ செயலி – கவுன்சில் அறிவிப்பு
மேலும் இரு சக்கர வாகனம், கார் போன்ற தனி வாகன பயன்பாட்டை தவிர்த்து மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு மத்தியில் பெட்ரோல் டீசல் செலவு பெரும் சுமையாக இருந்து வருகிறது. அதனால் மக்கள் அலுவலகம் செல்ல, மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்ல பொது போக்குவரத்தை நடுவதால் நகர பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஓரளவு பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தால் மட்டுமே மக்கள் மீண்டும் தனி வாகனங்களை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.