13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் தேர்வுகள் – நிதி அமைச்சகம் பரிந்துரை!

0
13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் தேர்வுகள் - நிதி அமைச்சகம் பரிந்துரை!
13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் தேர்வுகள் - நிதி அமைச்சகம் பரிந்துரை!
13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் தேர்வுகள் – நிதி அமைச்சகம் பரிந்துரை!

மத்திய நிதி அமைச்சகம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் தேர்வுகளின் ஆரம்ப மற்றும் மெயின் தேர்வுகளை 13 பிராந்திய மொழிகளில் நடத்துவதற்கு பரிந்துள்ளதுள்ளது.

பொதுத்துறை வங்கி:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனமாகும். ஐபிபிஎஸ் நிறுவனம் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறது. மேலும், நிறுவனங்களுக்கு மதிப்பீடு மற்றும் முடிவு செயலாக்க சேவைகளுக்கான தரக்கட்டுப்பாட்டு அமைப்புகளையும் வழங்குகிறது. மேலும், ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வு தேசிய பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

IPL 2021 – SRH vs CSK: சென்னை அணிக்கு 135 ரன்கள் என்ற எளிய இலக்கை கொடுத்த ஐதராபாத்!

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துவது தொடர்பாக ஒரு நிபுணர் குழு மூலம் சாதகங்கள் ஆராயப் பட்டது. ஆய்வுக் குழுவின் முடிவுகளை அறிவிக்கும் வரை அனைத்து வங்கி பணியாளர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆய்வுக் குழு தங்கள் ஆய்வின் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஐபிபிஎஸ் நிறுவனம் நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் முதல் கட்ட மற்றும் மெயின் தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற மொழிகளுடன் 13 பிராந்திய மொழிகளில் தேர்வுகளை நடத்துவதற்கு மத்திய அரசின் நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!

பிராந்திய மொழிகளில் பணியாளர் தேர்வு நடத்தப்படுவது, இனி வரும் காலங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பிற்கு முன்னதாக விளம்பரப்படுத்தப்பட்ட மற்றும் முதல் கட்ட தேர்வுகள் முடிந்த பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வுகள் முன்னர் அறிவிக்கப்பட்ட படியே நடத்தப்படும். மேலும், வங்கி பணியாளர்கள் பிராந்திய மொழிகள் மூலம் வாடிக்கையாளர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!