விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலுக்கு குவியும் எதிர்ப்பு – ப்ரோமோவை பார்த்து கொந்தளிப்பு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ பற்றி ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இது போன்ற சீரியல்கள் காரணமாக தான் பல தவறான புரிதல்கள் இளையவர்கள் மத்தியில் ஏற்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.
பிரபல சீரியல்
இன்று பலரும் விரும்பி பார்ப்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை தான். மிகவும் எதார்த்தமான கதை களத்துடன் விஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால், இந்த சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் ஒளிபரப்பாகி வருகிறது, காற்றுக்கென்ன வேலி சீரியல். படிக்க வேண்டும் என்று துடிப்போடு இருக்கும் ஒரு பெண்ணிற்கு பல தடைகளை அந்த கல்லூரி நிர்வாகத்தில் படிப்பவர்களே உருவாக்குகின்றனர்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் தாமரை – ஷாக் வோட்டிங் ரிப்போர்ட! ரசிகர்கள் ஷாக்!
ஆனால், அது அனைத்தையும் தகர்த்து சாதித்து வருகிறார் அந்த சீரியல் நாயகி வெண்ணிலா. அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் கல்லூரி நிறுவனர் சூர்யா. தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டங்களாக தனது தங்கை அபி தான் வெண்ணிலா மற்றும் அவரது நண்பர்களை அடித்தது என்று உண்மையினை சூர்யா தெரிந்து கொள்கிறார். தனது தங்கையை திட்டியது மட்டுமல்லாமல், வெண்ணிலா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் செமஸ்டர் தேர்வு எழுதவும் வழிவகை செய்கிறார். இதனால் வெண்ணிலா மனதில் சூர்யா பற்றிய நல்ல எண்ணங்கள் கூடி கொண்டே வருகிறது.
தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வெண்ணிலா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் தேர்வு எழுதி முடித்து விட்டு சூர்யாவை சந்திக்கின்றனர். அப்போது சூர்யா வெண்ணிலாவிடம் தேர்வு குறித்து கேட்கிறார். அப்போது வெண்ணிலா அவரை ரசிப்பது போலவும் பின்னே காதல் பாடல் அந்த ப்ரோமோவில் ஒலிப்பது போலவும் இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும் இது போன்ற காட்சிகள் சீரியலில் அமைவதால் தான் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான உறவு கொச்சைப்படுத்தப்படுகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு பின் நயன்தாராவின் ‘மாஸ்டர்’ பிளான் – ரசிகர்கள் உற்சாகம்!
ப்ரோமோவை பார்த்து விட்டு ஒரு ரசிகர் கமெண்டில் ‘தயவு செஞ்சு இன்னைக்கு கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல சில சீன்களை மாற்றுங்கள். இது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே தவறான எண்ணங்களை உண்டாக்க கூடாது’. இன்னொரு ரசிகரோ, ‘இதுபோன்று சீரியல் தான் ஆசிரியர்கள் மீது உள்ள மதிப்பு குறைகிறது’ என்று பதிவிட்டு உள்ளார்.