8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ..!

கடலூர்‌ மாவட்ட செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள வாகன சீராளர்‌ (Van Cleaner) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை (29.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கடலூர்‌ மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகத்தில் வாகன சீராளர்‌ (Van Cleaner) பணிக்கு என 2 பணியிடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் எட்டாம்‌ வகுப்பு தோச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர் வாகனங்களை சுத்தம்‌ செய்வதிலும்‌, பராமரிப்பதிலும்‌ போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் நல்ல உடல் தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

  • Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.07.2021 அன்றைய நாள் கணக்கின்படி 18 முதல்‌ 32 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் BC & MBC – 02 ஆண்டுகள், SC & ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம் விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியரகம்‌, கடலூர்‌ 607 001. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 29.04.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே இருப்பதால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Notification Link

Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here