மே 2 முதல் 5ம் தேதி வரை பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
மே 2 முதல் 5ம் தேதி வரை பொது விடுமுறை - அரசு அறிவிப்பு!
மே 2 முதல் 5ம் தேதி வரை பொது விடுமுறை - அரசு அறிவிப்பு!
மே 2 முதல் 5ம் தேதி வரை பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!

வரும் மே மாதத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் ஈத் உல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு மே 2 முதல் 5 வரை பொது விடுமுறை அறிவித்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

பொது விடுமுறை:

இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனித நாளான ஈத்-உல்-பித்ர் பண்டிகை இந்த ஆண்டு கோலாகலமாக கடைபிடிக்கப்பட இருக்கிறது. நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத்-உல்-பித்ர் பண்டிகையானது, இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஷவ்வால் பிறை தெரியும் நாட்களை பொறுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடும். அந்த வகையில் பாகிஸ்தானில் ஈத்-உல்-பித்ர் பண்டிகை மே மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அறிவிப்பு – தலைமை பதிவாளர் உத்தரவு!

இப்போது ஈத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் மே 2 முதல் 5 வரை கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மே 2 முதல் ஈத்-உல்-பித்ர் பண்டிகை கடைபிடிக்கப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக மே 2 முதல் 5 வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் மே 2 முதல் தொடங்கும் ஈத் உல் பித்ர் விடுமுறைக்கான அட்டவணையை பாகிஸ்தான் அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஒப்புதலுக்குப் பிறகு 3 நாள் விடுமுறை இப்போது 4 நாட்கள் என்ற கணக்கில் மே 2 ஆம் தேதி முதல் மே 5 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈத்-உல்-பித்ர் பண்டிகைக்கான விடுமுறை இன்று (ஏப்ரல்.30 துவங்கி கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!