இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் பொது விடுமுறை கடைபிடிப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் பொது விடுமுறை கடைபிடிப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!
இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் பொது விடுமுறை கடைபிடிப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!
இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் பொது விடுமுறை கடைபிடிப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

நேபாளத்தில் தற்போது பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

பொது விடுமுறை

சமீப காலமாக உலகளவில் உள்ள பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாக மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றில் தட்டுப்பாடு காணப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த வரிசையில் தற்போது நேபாள் அரசும் இணைந்திருக்கிறது. அதாவது நிதி நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நேபாள அரசு தற்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் கீழ், தேசத்தில் பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த வார துவக்கத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் விடுமுறை குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசின் செய்தி தொடர்பாளர் பகதூர் கார்க்கி தெரிவித்துள்ளார்.

Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

இது குறித்த உத்தரவில், ‘வரும் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் பொது விடுமுறை கடைபிடிக்கப்படும். மற்றபடி, அலுவலக நேரங்கள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே நேபாளத்தில் சனிக்கிழமைகள் தோறும் பொது விடுமுறை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேபாள அரசாங்கம், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு 2022 ஜூலை நடுப்பகுதி வரை ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here