பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாகாண அரசு அறிவிப்பு!

0
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு - மாகாண அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு - மாகாண அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாகாண அரசு அறிவிப்பு!

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

விடுமுறை அறிவிப்பு

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி அன்று இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (IOJK) மக்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவின் செய்தியை தெரிவிக்க காஷ்மீர் தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னதாக, டிசம்பர் 2021 இல், மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் விருப்ப விடுமுறைகள் பற்றி வெளியிட்ட சுற்றறிக்கையில் பிப்ரவரி 5 ஆம் தேதியை பொது விடுமுறையாகக் குறித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று காஷ்மீர் ஒற்றுமை தினத்தை கடைபிடிப்பதற்காக பொது விடுமுறை அறிவித்து சிந்து மாகாண அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை கடைப்பிடிக்கும், சிந்து மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவை பிப்ரவரி 5ம் தேதியன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? தொடரும் கோரிக்கை!

இதற்கு முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதியை பொது விடுமுறையாக ஏற்கனவே அறிவித்துள்ள மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதன் அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை பட்டியலில் இந்த நாளை சேர்த்து வருகிறது. இதற்கிடையில், குடியரசு தினத்தன்று அப்பாவி காஷ்மீரிகளை இந்தியக் கொடிகளை ஏற்றும்படி வற்புறுத்துவது தவறான நிலை மற்றும் நம்பிக்கையற்ற முயற்சியை வெளிப்படுத்தும் இந்தியாவின் சிறப்பியல்பு என்று சிந்து மாகாண செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here