நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் பேரகணி ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இத்திருவிழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் படுகர் இன மக்களால் இந்த விழாவானது கோலாகலமாக கொண்டாடப்படுவதால் அம்மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம்.

கோவை சுகாதாரத் துறையில் ரூ.40000 வரை சம்பளத்தில் வேலை – நாளை (டிச.16) கடைசி நாள்!

அதாவது ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவின் போது படுகர் இன மக்கள் ஒரு வாரம் விரதம் இருந்து தூய்மையை குறிக்கும் பாரம்பரிய ஆடையான வெண்ணிற ஆடை அணிந்து நடைபயணம் செய்து ஒற்றை நாணயத்தை காணிக்கையாக செலுத்துவார்கள். மேலும் நீலகிரி மாவட்ட சுற்று வட்டார கிராமங்களில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களில் அம்மன் பயன்படுத்தியதாக கருதப்படும் புனித பிரம்பை ஏந்தி நடைபயணம் செய்து அம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

இவ்வாறாக இந்த ஆண்டு வரும் டிச.22ம் தேதி நீலகிரி மாவட்ட பேரகணி ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வரும் டிச.22ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாவட்ட கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜனவரி 8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here