ஜூன் 20 ஆம் தேதியன்று பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
ஜூன் 20 ஆம் தேதியன்று பொது விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஜூன் 20 ஆம் தேதியன்று பொது விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஜூன் 20 ஆம் தேதியன்று பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அமெரிக்காவின் தென்கிழக்கு நகரமான அலபாமாவில் இந்த ஆண்டு ஜுன்டீன்த் நிகழ்வு கொண்டாடப்பட இருப்பதால் வரும் ஜூன் 20 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

அரசு விடுமுறை:

ஜுன்டீன்த் என்பது அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலையை நினைவு கூரும் ஒரு கூட்டாட்சி விடுமுறையாகும். இந்த நிகழ்வானது ஆப்பிரிக்க-அமெரிக்க கலாச்சாரத்தை கொண்டாடுவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது. முதலாவதாக டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனில் தோன்றிய இந்த ஜுன்டீன்த் நினைவு தினம் காலப்போக்கில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜுன்டீன்த் நினைவு தினத்தை முதல் முறையாக கொண்டாடும் 40வது மாநிலமாக மாறி இருக்கிறது அமெரிக்காவின் தென்கிழக்கு நகரமான அலபாமா.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன்டீன்த் நினைவு தினத்தை முன்னிட்டு அலபாமாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலபாமாவின் கவர்னர் கே ஐவி இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த ஆண்டு ஜூன்டீன்த் நினைவு தினம் ஜூன் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் இந்த விழா ஜூன் 20 ஆம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு அலபாமாவில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மூடப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படத்தினை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

இதற்கிடையில் அலபாமா சட்டம் ஜூன்டீன்த் தினத்தை தவிர மற்ற விடுமுறை நாட்களை நிரந்தர அரசு விடுமுறைகளாக அங்கீகரிக்கிறது. அந்த வகையில் அலபாமாவில் மூன்று மாநில கூட்டமைப்பு தொடர்பான விடுமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரலில் கான்ஃபெடரேட் மெமோரியல் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் மூடப்படும். அதே போல ஜூன் மாதத்தில் வரும் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸின் பிறந்த நாளை முன்னிட்டும், ஜனவரியில் கொண்டாப்படும் லீ டே மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டும் விடுமுறைகள் கடைபிடிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here