2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் – அரசு வெளியீடு!

0
2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் - அரசு வெளியீடு!
2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் - அரசு வெளியீடு!
2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் – அரசு வெளியீடு!

தற்போது துவங்கி இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் அட்டவணையை பாகிஸ்தான் அமைச்சரவைப் பிரிவு நேற்று (பிப்.2) வெளியிட்டது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பொது விடுமுறை

பாகிஸ்தான் அமைச்சரவை, தற்போது துவங்கி நடைபெற்று கொண்டிருக்கும் 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை நேற்று (பிப்.2) வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 14 நாட்கள் இந்த பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறையானது பிப்ரவரி 5ம் தேதி காஷ்மீர் தினத்திலிருந்து தொடங்குகிறது. முன்னதாக, பிப்ரவரி 5 ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கமாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதியை காஷ்மீர் தினமாக கடைபிடிப்பது வழக்கம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவை? ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்வு!

மேலும் இந்த நாள் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2022ம் ஆண்டில், வங்கித்துறைக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு கூடுதல் விடுமுறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வங்கிகள் பொதுமக்களுக்கு மட்டுமே மூடப்பட்டிருக்கும். ஆனால் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறைகள் சந்திரனின் தோற்றத்திற்கு உட்பட்டு மாறும் என்பது வழக்கமானதால், அதற்காக தனி அறிவிப்புகள் அடுத்து வெளியிடப்படும். இப்போது பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள 2022 விடுமுறை பட்டியலின் படி,

  • பிப்ரவரி 5 – காஷ்மீர் ஒற்றுமை நாள்
  • மார்ச் 23 – பாகிஸ்தான் தினம்
  • மே 1 – தொழிலாளர் தினம்
  • மே 3, 4 மற்றும் 5 – ஈதுல் பித்ர் *
  • ஜூலை 10, 11 மற்றும் 12 – ஈத்-உல்-அஜா *
  • ஆகஸ்ட் 14 – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 7, 8 – ஆஷுரா முஹர்ரம் *
  • அக்டோபர் 9 – ஈத்-இ-மிலாதுல் நபி*
  • டிசம்பர் 25 – குவாய்ட்-இ-ஆசம் தினம்

ஆகியவை நியமிக்கப்பட்ட விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!