தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – பீதியில் மக்கள்! சுகாதாரத்துறை அறிவுரை!
தமிழகத்தில் தற்போது கால நிலை மாற்றம் காரணமாக பல நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வேகமாக பரவும் வைரஸ் காரணமாக அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது, அதனை தொடர்ந்து அதிகமான பனி பொலிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் முடிந்துள்ள நிலையில் வெயில் தொடங்கிவிட்டது. இப்படி பருவ மாற்றம் ஏற்பட்டதால், வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளது. அதனால் மக்களுக்கு நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளி ஆகியவை வருகிறது.
TNPSC – 1083 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பொதுமக்கள் இந்த நோய் பாதிப்பை கண்டு அச்சப்பட வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.