தீவிரமடையும் ஓமைக்ரான் பாதிப்பு,10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? முதல்வர் ஆலோசனை!

0
தீவிரமடையும் ஓமைக்ரான் பாதிப்பு,10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? முதல்வர் ஆலோசனை!
தீவிரமடையும் ஓமைக்ரான் பாதிப்பு,10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? முதல்வர் ஆலோசனை!
தீவிரமடையும் ஓமைக்ரான் பாதிப்பு,10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? முதல்வர் ஆலோசனை!

குஜராத் மாநிலத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் பாதிப்பு காரணமாக மாநிலத்தில் கோவிட் -19 இன் நிலைமையை மறுஆய்வு செய்ய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று முக்கிய அமைச்சர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

முதல்வர் ஆலோசனை கூட்டம்:

குஜராத்தில் புதன்கிழமையான நேற்றைய நிலவரப்படி 91 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரையில் அதிகபட்சமாக 9 பேருக்கு ஓமைக்ரான் தொற்றும் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த 23 ஓமைக்ரான் மாறுபாடு வழக்குகளில், நான்கு நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 19 பேர் தற்போதும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தவிர ஜனவரியில் வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாடு மற்றும் மார்ச் மாதம் டிஃபென்ஸ் எக்ஸ்போ ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது.

PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

அதிகரித்து வரும் ஓமைக்ரான் மாறுபாட்டின் படி மாநிலத்தில் கோவிட் -19 இன் நிலைமையை மறுஆய்வு செய்ய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வியாழக்கிழமையான இன்று உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியுள்ளார். கூட்டத்தில், ஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல், சுகாதாரத்துறை இணை அமைச்சர் நிமிஷா சுதர், முதல்வரின் தலைமைச் செயலாளர் கைலாசநாதன், தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார், சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆபத்தான பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து குஜராத்திற்கு வரும் பயணிகளைத் தவிர, குஜராத் அரசு, கண்காணிப்பு நோக்கங்களுக்காக, மற்ற சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீத நபர்களை, சோதனை செய்கிறது. அனைத்து சர்வதேச பயணிகளும் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் 8 வது நாளில் மீண்டும் COVID-19 சோதனை செய்யபடும். மேலும், குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் (GSHSEB) தேர்வுகளை ஒத்திவைக்கவும், கோடை விடுமுறைகள் மற்றும் வரவிருக்கும் கல்வி அமர்வுகளுக்கான தேதிகளை மாற்றவும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்வி அமர்வு ஜூன் 6 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 13, 2022 அன்று தொடங்கும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14 முதல் 30, 2022 வரை திட்டமிடப்பட்டது, இப்போது மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகள் 10 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 21, 2022 வரை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 5, 2022 வரை திட்டமிடப்பட்ட கோடை விடுமுறைகள் இப்போது மே 9 முதல் ஜூன் 12, 2022 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பொங்கல் பரிசுத்தொகை இல்லை?

அகமதாபாத் நகரத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி வருவதால் அகமதாபாத் நகர காவல்துறை CrPC பிரிவு 144 தடை உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நகரில் பட்டாசு வெடிப்பதற்காக தேதி வாரியான அனுமதிக்கப்பட்ட நேரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும், குஜராத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், காந்திநகர், ஜாம்நகர் மற்றும் ஜூனாகத் ஆகிய 8 நகரங்களிலும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!