தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!

0
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களை கொண்டு சொல்ல வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டு இருந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பொது தேர்வுக்கான வினாத்தாள்:

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்ற நிலையில் பள்ளிகள் திறக்க ஆரம்பித்து மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் உள்ள மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க உள்ளது.

IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கடுமையான பயிற்சியில் வீரர்கள்!

அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். மேலும் அடுத்தாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் 12, 10 மற்றும் 11 தேர்வுகள் 255 மையங்களில் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 20, 662 பேரும், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வை 19 842 பேரும் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 19 866 பேரும் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான பணிகள் தொடங்கிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள மாணவர்கள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள் இரு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் மற்றும் தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய முகப்பு சீட்டு வழங்கும் பணி இன்று தொடங்கியது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விநியோகம் செய்யப்பட்ட வினாத்தாள்களை தலைமையாசிரியர்கள் பெற்றுச் சென்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here