
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்வுக்கான தேதியும் பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. மேலும் தற்போது பொதுத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் – முக்கிய அறிவிப்பு!
அதன்படி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு தொடங்க இன்னும் சற்று நாட்களே உள்ளதால் பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும் பொதுத்தேர்வு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே வினாத்தாள்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பாடங்களை விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.