தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு தேதி வெளியீடு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் வரும் 2022 – 23 ஆம் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு தொடக்கம்:

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், இதற்கான கால அட்டவணையை கடந்த மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு!

அதன்படி 12ம் மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதேபோல் 11ம் மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையும், 10 ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைய தாமதம் ஆக உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவித்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மற்றும் வரும் 2022 – 23ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதிகள் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2023 மார்ச், 13ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2023 மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஏப்ரல் 3 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். இதை அடுத்து, வரும் கல்வியாண்டிலிருந்து கொரோனா கால அட்டவணை போல அல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற முக்கிய அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!