
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் குறைப்பு? கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. ஆனால் இன்னும் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளதால் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்திய விமான சேவை ரத்து! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இதனை தொடர்ந்து தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பாடங்களை விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளி ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் பொதுத்தேர்வு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. அதனால் பாடத்திட்டங்களை அவசர அவசரமாக நடத்தி வருகின்றனர். இதனால் தேர்வில் அவசர அவசரமாக நடத்தப்பட்ட பாடங்களும், நடத்தாத பாடங்களும் இடம்பெறும். இது மாணவர்கள் கூடுதலான மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டத்தில் கடைசியாக உள்ள 2 பாடத்திட்டங்களை தேர்வில் இருந்து நீக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திருச்சி மாவட்டக் குழுவினர் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்துள்ளார்.