9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் – 2023-24 கல்வியாண்டில் அதிரடி!
2023 – 24 ஆம் நடப்பு கல்வி ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியுசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கர்நாடக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வுகள்:
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஐந்தாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு, 10 மற்றும் பியுசி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பி யு சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிலேயே பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுகளின் மூலமாக மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கும் என்றும் மாணவர்களின் மதிப்பெண்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மட்டுமே தெரியும் வகையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கிய மழை.. தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் நியூஸ்!
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் அவர்களின் கல்லூரிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களும், பியுசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும், மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.