பொதுமக்களுக்கு அலர்ட்.. 22 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
பொதுமக்களுக்கு அலர்ட்.. 22 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
பொதுமக்களுக்கு அலர்ட்.. 22 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
பொதுமக்களுக்கு அலர்ட்.. 22 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழகத்தில் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று (அக். 22) பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்பதால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், நேற்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்பதால் இன்றும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்னும் அதே இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று வலுப்பெறலாம் எனவும் அதனால் வங்கக் கடல் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று (அக். 21) 25 மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும், அதன் பின் நாளை (அக். 23) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும்.

தமிழகத்தில் அக்.24ம் தேதி மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

அதன் பின் வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற அக். 24 ஆம் தேதி புயலாக மாறும்.அதனை தொடர்ந்து அக். 25 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசி கடற்கரை நோக்கி நகரும். அதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேமல், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!